சிறுநீரகக் கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டியவை பற்றி பார்க்கலாம்.
சிறுநீரகக் கல் பிரச்சனை என்பது தற்போதைய காலகட்டத்தில் பொதுவான உடல்நல பிரச்சனையாக மாறிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆகியவையே சிறுநீரக கற்கள் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன.
சிறுநீரகக் கல் உருவாகக் காரணம்
கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை உடலில் சேர்ந்து அவற்றை கரைக்க போதுமான தண்ணீர் இல்லாதபோது அவை திடமாகி கற்களை (cause of kidney stone) உருவாக்குகின்றன. முறையான உணவுகளை எடுத்துக்கொள்வது புதிய சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதோடு, சிறிய கற்களை வெளியேற்றவும் உதவுகின்றன.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்
சிறுநீரக கற்களை தடுக்க, கரைக்க உதவி புரியும் உணவுகள் எவை, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பதை பார்க்கலாம். முதலில் உடலை நீரேற்றத்துடன் (Drink more water) வைத்திருக்க வேண்டியது அவசியம். தாதுக்கள் படிவதை தடுக்க தினமும் குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரகக் கற்களுக்கு எலுமிச்சை ஜூஸ், இளநீர் சிறந்தது. எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் கால்சியம் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
கால்சியம் உணவுகளை குறைத்துவிடாதீர்கள்
சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் கால்சியம் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்துவது தவறானது. உணவில் இருந்து கிடைக்கும் கால்சியம் குடலில் உள்ள ஆக்சலேட்டுகளுடன் பிணைந்து வெளியேற்றப்படுகிறது. ஆகவே, குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை மிதமான அளவு சாப்பிடலாம். அதேசமயம் கால்சியம் உணவுகளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரின் (Seek medical advice) ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்.
எது சாப்பிடுவதை குறைக்க வேண்டும்
பெரும்பாலான சிறுநீரகக் கற்கள் கால்சியம் – ஆக்சலேட் வகையை சேர்ந்தவையாக உள்ளன. ஆகவே கீரை, பீட்ரூட்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, நட்ஸ், சாக்லேட், சோயா போன்ற உணவுகளை (Foods to avoid for kidney stones) சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள்.
உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டாம்
அதிகப்படியாக உப்பு சேர்ப்பது சிறுநீரில் கால்சியத்தை அதிகரித்து, சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகவே, உணவில் அதிகமான உப்பு (Reduce salt in Food) சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகள், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அவசியமாகும்.
இறைச்சிகளை தவிர்ப்பது நல்லது
சிறப்பு இறைச்சிகள், சிக்கன், முட்டை, மீன் ஆகியவற்றில் அதிகமான பியூரின்கள் உள்ளன. இவை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை (Avoid red meat) உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே, இவற்றை கொஞ்சமாக எடுத்துக்கொள்வது நல்லது. புரதச் சத்துக்களுக்கு பயிறு, பீன்ஸ், பருப்பு சேர்த்துக்கொள்வது சிறந்தது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், அவை செரிமானத்தையும் மேம்படுத்துகின்றன.
உடற்பயிற்சி, சீரான உணவு முறை
உடல் பருமன், சீரற்ற வளர்ச்சிதை மாற்றம் ஆகியவையும் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. வழக்கமான உடற்பயிற்சி, சமச்சீரான உணவு முறை, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறுநீரகக் கற்கள் (Prevent kidney stones) வருவதைத் தடுக்கும்.
