கேரளாவில் RSS இயக்கத்தின் பயிற்சி முகாமில் கூட்டு ஓரினச் சேர்க்கை கொடூரத்தால் ஐடி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஆனந்து அஜி என்ற ஐடி இளைஞர், அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். தமது தற்கொலைக்கு காரணமே, ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் தமக்கு பலராலும் தரப்பட்ட பாலியல் தொந்தரவுதான் என ஆனந்து அஜி எழுதிய கடிதம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வயநாடு தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி கூறுகையில், ஆனந்து அஜி தமது கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல நிர்வாகிகளால் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் முகாமில் பலரும் இப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக ஆனந்து அஜியின் கடிதம் வெளிப்படுத்துகிறது. இது உண்மையானால் மிகவும் கொடூரமானது. இந்த குற்றம் தொடர்பாக நிலவும் மவுனத்தை உடைக்க வேண்டும்; இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.