ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தாங்கள் நடத்திய தாக்குதலில் 200 தலிபான் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆப்கானின் 21 காவல் அரண்களை கைப்பற்றியதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் உச்சகட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் வெள்ளிக்கிழமையன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தலிபான்கள் அறிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த பாகிஸ்தான் ராணுவம், 23 வீரர்கள் உயிரிழந்துள்ளது உண்மை; ஆனால் பாகிஸ்தானின் தாக்குதலில் 200 ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் 21 காவல் அரண்களை கைப்பற்றி இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஆப்கான் குற்றம்சாட்டுகிறது; ஆனால் ஆப்கான் ஆதரவு தலிபான் தீவிரவாதிகள், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
