வருமானம் குறைஞ்சு போச்சு.. மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. நடிகர் சுரேஷ் கோபி

Published On:

| By Mathi

Suressh Gopi

திரைப்படங்களில் நடிக்காமல் இருப்பதால் தமக்கு வருமானம் குறைந்துவிட்டது; இதனால் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று கேரளாவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவில் 2016-ம் ஆண்டு இணைந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றவர் சுரேஷ் கோபி.

ADVERTISEMENT

இந்த நிலையில் கேரளா மாநிலம் கண்ணூரில் நேற்று (அக்டோபர் 12) நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே மத்திய அமைச்சராக வேண்டும் என விரும்பியது இல்லை. சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்பினேன். எனக்கு இப்போது வருமானமும் குறைந்துவிட்டது. என்னை விட கேரளாவின் மூத்த பாஜக தலைவரான மாநிலங்களவை எம்பி சதானந்தன் மாஸ்டர்தான் பொருத்தமானவர்; அவர் மத்திய அமைச்சராக்கப்பட வேண்டும்; இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share