கவின் நடிக்கும் ‘மாஸ்க்’… சஸ்பென்ஸ் வைத்த படக்குழு!

Published On:

| By Selvam

விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 26) வெளியாகியுள்ளது. Kavin movie First look

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து இளம் தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக கவின் அறியப்படுகிறார். ‘டாடா’, ‘லிஃப்ட்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவரது ‘பிளடி ஃபெக்கர்’ படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தநிலையில், விக்ரனன் அசோக் இயக்கத்தில் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ், பிளாக் மெட்ராஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இந்தநிலையில், ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. கவின், மாஸாக கூலிங் கிளாஸ் அணிந்தபடியும், கையில் ஒரு மாஸ்க்கை வைத்தபடியும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

கவின் முன்பாக பணக்கட்டுகள் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா கையில் துப்பாக்கி வைத்தபடி ஒரு போஸ்டரில் இடம்பெற்றுள்ளார். மற்றொரு போஸ்டரில் இருவரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கின்றனர். மிகவும் சஸ்பென்ஸ் கலந்த இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Kavin movie First look

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share