கரூர் பெருந்துயர வழக்கில் ஜாமீனில் உள்ள தவெக நிர்வாகி பவுன்ராஜ் இன்று (ஏப்ரல் 4) அதிமுகவில் இணைந்தார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தற்போது இவர்கள் இரண்டு பேரும் ஜாமீனில் உள்ளனர்.
இதில் மதியழகன் கரூர் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்தசூழலில் இன்று (ஏப்ரம் 4) பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தவெகவினர் அதிமுகவில் இணைந்தனர். அந்தவகையில் பவுன்ராஜும் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
