தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது. திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஆர். காந்தியை ஆதரித்து வாக்காளர்களிடம் கனிமொழி எம்.பி. பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக தேர்தல் பயத்தில் உள்ளது என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, “நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதால்தான் அவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை. திமுகவைப் பொறுத்தவரை, நிச்சயமாக வெற்றி எங்களுக்குத்தான் என்ற நம்பிக்கையோடு தெளிவாக இருக்கிறோம்” என கனிமொழி தெரிவித்தார்.
