ஜேஇஇ மெயின் 2026 ஏப்ரல் செஷன்: ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கான கட் ஆஃப் என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

jee main 2026 april result expected cutoff

ஜேஇஇ (JEE) மெயின் 2026 செஷன் 2 தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 9 வரை நடைபெற்றன. இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை (NDA) தெரிவித்துள்ளது.

முடிவுகளுடன் இறுதி ஆன்சர் கீயும் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பர்சென்டைல் (Percentile) கணக்கிடப்படும்.

ADVERTISEMENT

ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு தகுதி

ஜேஇஇ மெயின் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களில், நாடு முழுவதும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.

ADVERTISEMENT

இந்த தேர்வே ஐஐடி போன்ற உயர்நிலை பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அடுத்த கட்டமாகும்.

ADVERTISEMENT

எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்

2026ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தகுதி கட் ஆஃப் (பர்சென்டைல்) கீழ்வருமாறு இருக்கும் என கல்வி நிபுணர்கள் கணிக்கின்றனர்:

  • பொதுப்பிரிவு: 93 – 95 பர்சென்டைல்
  • ஈடபிள்யூஎஸ்: 80 – 82 பர்சென்டைல்
  • ஓபிசி: 79 – 81 பர்சென்டைல்
  • எஸ்சி: 60 – 63 பர்சென்டைல்
  • எஸ்டி: 47 – 50 பர்சென்டைல்

இந்த கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக பெற்றவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் பங்கேற்க முடியும்.

போட்டி அதிகரிப்பு, கட் ஆஃப் உயரும் வாய்ப்பு

இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கட் ஆஃப் சிறிது அதிகரிக்கும் வாய்ப்பு, உயர்ந்த பர்சென்டைல் பெற அதிக மதிப்பெண் தேவை என கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், தேர்வு கடினத்தன்மை மற்றும் மாணவர்களின் செயல்திறன் ஆகியவை இறுதி கட் ஆஃப் மீது தாக்கம் ஏற்படுத்தும்.

மதிப்பெண் vs பர்சென்டைல்

ஜேஇஇ மெயின் தேர்வில், நேரடி மதிப்பெண் அடிப்படையில் அல்ல, பர்சென்டைல் முறையில் தரவரிசை வழங்கப்படுகிறது. இதனால், ஒரே மதிப்பெண் பெற்றாலும் வெவ்வேறு ஷிப்ட்களில் பர்சென்டைல் மாறுபடலாம். ஜேஇஇ மெயின் 2026 ஏப்ரல் செஷன் முடிவுகள் வெளியாகும் நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தகுதி கட் ஆஃப் குறித்து மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதிகரித்த போட்டி காரணமாக, இந்த ஆண்டு கட் ஆஃப் உயர்ந்த நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், உயர்ந்த பர்சென்டைல் பெறுவது ஐஐடி நோக்கி செல்லும் முக்கிய கட்டமாகும்.

ஜேஇஇ மெயின் ஏப்ரல் செஷன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share