தெற்கு ரயில்வே மண்டலத்தில் புதிய வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெற்கு மண்டலத்தில் ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் (Hospitality Monitor) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 84 காலியிடங்கள் (Vacancies) நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்கள் மற்றும் பணியின் தன்மை
பதவி: ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்
மொத்த காலியிடங்கள்: 84
இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்கள், ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான உணவு மற்றும் சேவை தரத்தை கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுவார்கள்.
தகுதி மற்றும் வயது வரம்பு
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.எஸ்.சி (ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்), ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் சயின்ஸ், பிபிஏ / எம்பிஏ (குலினரி ஆர்ட்ஸ் / டூரிசம்) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.04.2026 நிலவரப்படி அதிகபட்சம் 27 வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் மற்றும் நியமன காலம்
இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.30,000 வரை ஒருங்கிணைந்த சம்பளம் வழங்கப்படும். மேலும், இந்த பணியிடம் ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், தேவைக்கு ஏற்ப நீட்டிக்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை
இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு வாக்-இன் நேர்முகத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் நடைபெறும். எழுத்துத் தேர்வு இல்லை என்பது முக்கிய அம்சமாகும்.
நேர்காணல் தேதி மற்றும் இடம்
வாக்-இன் நேர்காணல் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும்:
தேதிகள்: ஏப்ரல் 25, 27 மற்றும் 28, 2026
நேரம்: காலை 10.30 மணி முதல்
இடம்: ஐஆர்சிடிசி மண்டல அலுவலகம், சேத்துப்பட்டு, சென்னை.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் விண்ணப்பம் இல்லை, அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும், தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
சென்னையில் நடைபெறும் ஐஆர்சிடிசி வாக்-இன் வேலைவாய்ப்பு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையில் படித்தவர்களுக்கு நேரடி அரசு இணைப்பு நிறுவனத்தில் பணிபுரிய ஒரு முக்கிய வாய்ப்பாகும். குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் தகுதியானவர்கள் தயாராக கலந்து கொள்வது அவசியம்.
