Iran-Israel War: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு அதிரடி சரிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

war

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழல், உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.31 ஆக சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 117 டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் மீதும், ரூபாய் மதிப்பின் மீதும் கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT
பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலை, சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே சுமார் 2.8% வரை சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை (Sensex): இன்று ஒரே நாளில் 2,235 புள்ளிகள் வரை சரிந்து 76,558 என்ற நிலையை எட்டியது.

ADVERTISEMENT

தேசிய பங்குச்சந்தை (Nifty): சுமார் 720 புள்ளிகள் சரிந்து 24,731 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்தியாவைப் போலவே ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் இன்று பலத்த சரிவைச் சந்தித்துள்ளன.

ADVERTISEMENT
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

பங்குச்சந்தை வீழ்ச்சி ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.31 ஆக வர்த்தகமாகிறது. இது முதலீட்டாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளர்கள் கவலை

போர்ச் சூழல் நீடிக்கும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்பதால் இந்தியச் சந்தையில் நிலையற்ற தன்மை தொடர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்வதால், தங்கம் விலையும் உயரும் எனக் கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share