”உண்மையிலேயே சின்னவர் நான் தான்!” : சீமான்

Published On:

| By christopher

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நவம்பர் 27ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது டெல்லி விமான நிலையத்திற்கு ஒருமுறை சென்றபோது ராணுவம் தன்னை சுற்றி வளைத்ததாக அவர் கூறிய சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், “நான், என் தம்பி பிரபு, மூத்தவர் ஒருமுறை டெல்லி விண்ணூர்தி நிலையத்திற்கு சென்றிருந்தோம். பிரபு காரை பின்னாடி எடுத்து விட்டுட்டு வரேன் என்று சென்றுவிட்டார். மூத்தவர் தம் அடிக்க சென்றுவிட்டார்.

நான் முன்னாடி போயிட்டேன். திடீர்னு பாத்தீங்கனா, என்னைய ராணுவம் சுத்தி வளச்சிருச்சி. பிரபு எதுக்கு என்று தெரியாமல் பதறிட்டான். மூத்தவர் அப்படியே தம்மோட நின்னுட்டார்.

ஆனா சுத்தி நின்ன ராணுவ வீரர்கள் அப்படியே என்ன கட்டிபிடிச்சி, “அண்ணா ஒரே ஒரு போட்டோ.. ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்டார்கள்.

உடனே அங்கு வந்த மூத்தவர், ”அடப்பாவிகளா கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டீங்களேப்பா” என்றார்.

அவர்கள், அய்யா அண்ணன ரொம்ப பிடிக்கும்யா. அவர பத்திரமா பாத்துகுங்கயா என்றனர்.

அதன்பிறகு அவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு விமானத்தில் ஏறும்போது அவர்கள் எனக்கு சல்யூட் அடிச்சாங்க”

இதற்கு மூத்தவர், ”தம்பி இதனால தான் இந்த பயலுக பதவிய விட்டு கீழ இறங்க மாட்டேங்குறாங்க. நமக்கே இந்த 10 நிமிஷத்துல என்னா பரபரப்பு” என்றார்.

இதுமாறி நாகலாந்து, திரிபுரா, மேகலாயா, காஷ்மீர் என அனைத்து இடங்களிலும் நமக்கு ஆள் இருக்கிறது.

பஞ்சாபில் எல்லாம் நிறைய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். 70, 80 வயது ஆட்கள் எல்லாம் சீமான் அண்ணா என்றுதான் அழைப்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

நான் தான் சின்னவர்!

மேலும் பிரபாகரன் குறித்து பேசிய சீமான்,  ”தமிழ் தாய், தனக்கு பேரழிவு வரும்போது தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு பிரசவித்த தலைமகன்தான் என்னுடைய அண்ணன் பிரபாகரன்.

உலகத்தில் எந்த இனத்திற்கும் கிடைக்காத ஒப்பற்ற புரட்சியாளர். எந்த புரட்சியாளனும் என் தலைவன் பிரபாகரனுக்கு ஈடாக முடியாது. பெற்ற பிள்ளைகள் அத்தனை பேரையும், தாய் நிலத்தின் விடுதலைக்காக களத்திலே பலியிட்ட உலகப் புரட்சியாளர்.

உண்மையிலேயே பெரியவர் பிரபாகரன்! உண்மையிலேயே சின்னவர் நான்தான். ஆனால், இங்கு ஆளாளுக்கு பெரியவர் சின்னவர் என்று சொல்லி வருகிறார்கள்” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

FIFA WorldCup : மெக்சிகோவுடன் வெற்றி… சூட்டை கிளப்பும் மெஸ்ஸி

சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share