ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ‘இந்தியன்-2’ படம் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். Indian 2 netflix
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, ரிஷிகாந்த் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேனு போன்றவர்கள் நடித்துள்ளார்கள். Indian 2 netflix
அனிருத் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் தொகுத்த இந்தப் படம் லைக்கா நிறுவனத்தால் ரூ.250 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.
ஷங்கரும் கமல்ஹாசனும் இரண்டாவது முறையாக இணைந்த இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ற மாதிரி படக் குழுவினரும் சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாகப் படத்தை விளம்பரப்படுத்தினர். கமல்ஹாசனின் மாறுவேடமும் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது.
ஆனால், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது. இதனால் தியேட்டரில் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே இந்தியன் 2 படம் திரையிடப்பட்டது.
இந்தநிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்த நிலையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் எக்ஸ் தளத்தில் இன்று (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Olympic 2024: பாரிஸில் இந்தியாவுக்கு அதிர்ச்சி… நடுவர்கள் ஒருதலைப்பட்சமா?