கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் மீட்புப்பணியானது இன்று (ஆகஸ்ட் 4) ஆறாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை 219 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. chooralmalai mundakkai update
உடல்கள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகிற இடங்களில் அதிகமான மீட்புப்பணியாளர்கள் மற்றும் எந்திரங்கள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் மொஹம்மத் ரியாஸ் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்திய விமானப்படை மூலமாகக் கொண்டுவரப்பட்ட ZAWER மற்றும் REECO ராடார்களின் மூலம் தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. chooralmalai mundakkai update
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆறாகப் பிரித்து, 40 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றன.
சாலியார் ஆற்றின் கரையோரமாகவும் தேடுதல் பணி நடைபெற்றுவருகிறது. நிரந்தர பாலம் கட்டிமுடிக்கப்படும் வரை, ராணுவத்தால் கட்டப்பட்ட 190 அடி தற்காலிக பெய்லி பாலம் தொடர்ந்து அங்கே இருக்கும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்க மாற்று இடத்தில் சிறந்த முறையில் குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தனது அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித்தரும் என்று உறுதியளித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Paris Olympics 2024: தங்கத்தைக் குறிவைக்கும் தடகள வீரர்கள்!
“வாழ்க்கையில ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா”… அஜித்தின் 32 ஆண்டுகள் பயணம்!
வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு நிதியுதவி… நன்றி தெரிவித்த பினராயி