‘Operation Sindoor’- கதறும் மசூத் அசார்- 26 ஆண்டுகளாக தொடரும் ‘இந்திய வேட்டை’யின் பின்னணி!

Published On:

| By Minnambalam Desk

India gave death blow to Masood Azhar

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்திய விமானப் படை விமானங்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைமை அலுவலகம், முகாம்கள் மட்டும் அழிக்கப்படவில்லை.. இந்தியாவுக்கு தீராத தலைவலியாக இருந்து வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பமும் சிதைந்ததுதான் மிக முக்கியமானது. India gave death blow to Masood Azhar

மசூத் அசார்.. பாகிஸ்தானில் பதுங்கிக் கொண்டு இந்தியாவில் நாசவேலைகளை நடத்துகிற ஏதோ ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல.. இந்த மசூத் அசாருக்கும் இந்தியாவுக்குமான ‘ரத்தவெறி’ தொடர்பு நெடுங்காலமாக இருந்து வருகிறது.

யார் இந்த மசூத் அசார்: India gave death blow to Masood Azhard Azhar

1990களில் பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி மனித உயிர்களை நரவேட்டையாடின. இந்தியாவின் அமைதியை சீர்குலைப்பதில் இந்த பயங்கரவாத இயக்கங்கள் போட்டி போட்டுக் கொண்டன. இதில் முதன்மையான அமைப்புதான் ஜெய்ஷ் இ முகமது. இதனை உருவாக்கியவர்தான் மசூத் அசார். India gave death blow to Masood Azhar

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பவல்பூர்தான் (இந்தியாவின் வான் தாக்குதலுக்குள்ளான பகுதி) மசூத் அசாரின் பூர்வீகம். அரசு பள்ளி தலைமை ஆசிரியராகவும் மத போதகராகவும் பணியாற்றிய அல்லாஹ் பக்‌ஷ் ஷபீரின் 11 குழந்தைகளில் 3-வது குழந்தை மசூத் அசார். India gave death blow to Masood Azhar

1989-ல் ஆசிரியராகப் பணியாற்றிய மசூத் அசார், ஹர்ஹத் உல் அன்சார் என்ற பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களுக்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ஹர்ஹத் உல் அன்சார் இயக்கத்தின் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார் மசூத் அசார். India gave death blow to Masood Azhar

ஒரு கட்டத்தில் ஹர்ஹத் உல் அன்சார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த மசூத் அசாரின் கொடுங்கரங்கள், சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் கை கோர்த்தன. பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று பயங்கரவாத இயக்கங்களுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டார் மசூத் அசார்.

இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாத இயக்கங்களிடையே ‘சகோதர யுத்தங்களும்’ நடந்தன. இப்படியான ‘சகோதர யுத்தங்களுக்கு’ முடிவு கட்ட போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த மசூத் அசாரை கச்சிதமாக தூக்கியது இந்திய பாதுகாப்புப் படை. 1994-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் மசூத் அசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பாகிஸ்தான் பெற்றெடுத்த பயங்கரவாத இயக்கங்கள் மிகப் பெரும் பின்னடைவை சந்தித்தன. கத்தியின்றி ரத்தமின்றி இந்திய பாதுகாப்புப் படை இதனை சாதித்தது.

ஆனால் இந்தியாவின் நிம்மதி நீடிக்கவில்லை. மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளை பிணைக் கைதிகளாக பிடிப்பது உள்ளிட்ட குடைச்சல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டுதலில் பயங்கரவாத இயக்கங்கள் மேற்கொண்டன. India gave death blow to Masood Azhar

இதன் உச்சமாக நடந்ததுதான் 1999-ம் ஆண்டு கந்தஹார் விமானக் கடத்தல் சம்பவம். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி 180 பயணிகளுடன் புறப்பட்ட IC 814 விமானம், நடுவானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்போதும் விமான பயணிகளை விடுவிக்க பயங்கரவாதிகள் முன்வைத்த நிபந்தனை, மசூத் அசாரின் விடுதலைதான். India gave death blow to Masood Azhar

பயங்கரவாதிகளுடனான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்தான், மசூத் அசாரை கந்தஹாருக்கு அழைத்துச் சென்று பயங்கரவாதிகளிடம் ஒப்படைத்து பிணைக் கைதிகளாக இருந்த பயணிகளை மீட்டுக் கொண்டு வந்தார்.

இந்திய சிறையில் இருந்து மீட்கப்பட்டு வந்த மசூத் அசாருக்கு பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது இந்தியாவை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆம் பயங்கரவாத இயக்கங்களின் ‘தலைமகனாக’ உருவெடுத்துவிட்டார் மசூத் அசார். India gave death blow to Masood Azhar

இதன் பின்னர்தான் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாதத்தை மசூத் அசார் உருவாக்கினார். இந்த இயக்கம், மசூத் அசாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரால் இயக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலிபான்கள், மசூத் அசாரை முழு வீச்சில் ஆதரித்தனர். India gave death blow to Masood Azhar

அடுத்த 2 ஆண்டுகளிலேயே மசூத் அசார் தமது பயங்கரவாத விளையாட்டை தொடங்கினார். 2001-ல் இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு மசூத் அசார்தான் காரணம் என இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியதால், அவரை சிறையில் அடைத்துவிட்டோம் என சொன்னது பாகிஸ்தான்.

இதன் பின்னர் 2008-ம் ஆண்டு உலகை உறைய வைத்த மும்பை தாக்குதல் சம்பவத்தை நடத்தியது மசூத் அசாரின் பயங்கரவாத இயக்கம். அப்போதும் மசூத் அசாரை பாதுகாத்தது பாகிஸ்தான்.

2016-ம் ஆண்டு ஜம்மு பஞ்சாப் எல்லையில் பதன்கோட் விமான படை தளம் மீதும் மசூத் அசாரின் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி விமானப் படை வீரர்கள் 4 பேர் உயிரைக் குடித்தது.

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்கள் உயிரிழக்க காரணமாக இருந்ததும் மசூத் அசார்தான். இந்த மசூத் அசார், ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி. இத்தகைய மசூத் அசாரை அழித்தொழிக்கத்தான் இந்தியா 26 ஆண்டுகளாகப் போராடியது.

தற்போது ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து Operation Sindoor ராணுவ நடவடிக்கை மூலம் மசூத் அசாரின் குடும்பத்தையே சிதைத்துவிட்டது இந்திய பாதுகாப்புப் படை. இந்தியா 54 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மீது தாக்குதல் நடத்தவும் மசூத் அசார் குடும்பமும் அவர்கள் நடத்தி வந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கமும்தான் காரணம். அப்பாவி இந்தியர்களின் உயிர்களைக் குடித்த இந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தையும் அதன் நிறுவனர் மசூத் அசாரையும் நிர்மூலமாக்கும் இந்தியாவின் நடவடிக்கையில் ஒரு பகுதி மட்டும் நிறைவேறி இருக்கிறது.. இந்தியாவின் ‘மசூத் அசார்’ வேட்டை தொடரத்தான் போகிறது!

India gave death blow to Masood Azhar
India gave death blow to Masood Azhar
India gave death blow to Masood Azhar
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share