54 ஆண்டுகளுக்குப் பின்… பாகிஸ்தானின் ‘இதயம்’ பஞ்சாப் மீது தாக்குதல் நடத்திய இந்தியா

Published On:

| By Minnambalam Desk

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம்.. அந்நாட்டின் இதயம் போன்றது. பாகிஸ்தான் ராணுவ தளபதிகள், ஆளும் வர்க்கத்தினர் பெரும்பாலானோர் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தான். India attacks punjab heartland

1971-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தங்களில் எந்த ஒரு பாதிப்பையுமே சந்திக்காத மாகாணம் பாகிஸ்தானின் பஞ்சாப்.

ADVERTISEMENT

1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின் போதும் லடாக் பிராந்தியத்துடன் போர் நடவடிக்கைகள் சுருக்கப்பட்டிருந்தன.

2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து, “Operation Parakram ” ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை முழு வீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மீது சிறு தாக்குதலும் நடத்தப்படவில்லை.

ADVERTISEMENT

2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ஊரி தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்- துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதும் பஞ்சாப் மாகாணம் பாதிக்கப்படவில்லை. India attacks punjab heartland

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போதும் பஞ்சாப் மாகாணத்துக்கு எந்த சேதாரமும் இல்லை.

ADVERTISEMENT

தற்போது ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் – ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கையானது பாகிஸ்தான் நாட்டின் இதயப் பகுதியான பஞ்சாப் மாகாணத்தின் முதன்மை நகரங்களான பவல்பூர் மற்றும் முர்திகேவை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளன. 54 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மீது இந்தியா முதல் முறையாக தாக்குதலை நடத்தி இருக்கிறது. India attacks punjab heartland

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share