கோவையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக நாகர்கோவில் செல்லும் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Dindigul Coimbatore Nagercoil
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிப்பட்டி- சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,
- கோவை- நாகர்கோவில் இடையேயான 16322 எக்ஸ்பிரஸ் ரயிலானது ஜூலை 1, ஜூலை 2 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். ஜூலை 1, ஜூலை 2 ஆகிய இரு நாட்களிலும் 16322 எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படமாட்டாது.
- அதே நேரத்தில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜூலை 1-ந் தேதி மாலை 3.45 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லக் கூடிய அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நின்று செல்லும். இவ்வாறு சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.