ஐஐடி பி.எஸ் படிப்பில் நிதியுதவி: ஜேஇஇ இல்லாமல் சேர்க்கை 

Published On:

| By Santhosh Raj Saravanan

iit bs program financial assistance scholarship

ஜேஇஇ இல்லாமல் ஐஐடி படிப்பு வாய்ப்பு

ஐஐடி மெட்ராஸ் வழங்கும் பி.எஸ் (Bachelor of Science) ஆன்லைன் பட்டப்படிப்பு, ஜேஇஇ (JEE) தேர்வு இல்லாமல் சேர முடியும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஐஐடி (IIT) தரப்படிப்பு கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். 

ADVERTISEMENT

எந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன?

இந்த பி.எஸ் திட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய படிப்புகள் வழங்கப்படுகின்றன:

ADVERTISEMENT
  • டேட்டா சயின்ஸ் (Data Science) மற்றும் அப்ளிகேஷன்ஸ்
  • மேனேஜ்மெண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ்
  • எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்
  • ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜி

இந்த அனைத்து பாடங்களும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்படுகின்றன. 

இந்த படிப்பு ஆன்லைனில் கற்பிக்கப்பட்டாலும் தேர்வுகள் நேரடி மையங்களில் நடத்தப்படும். ஐஐடி சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பட்டப்படிப்பு ஐஐடி தரத்துடன் இணையானதாக கருதப்படுகிறது. 

ADVERTISEMENT

நிதியுதவி 

இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சம் குடும்ப வருமான அடிப்படையில் 75% வரை கட்டண சலுகை, எஸ்.சி / எஸ்.டி / எஸ்.சி.ஏ மாணவர்களுக்கு முழு கட்டண தள்ளுபடி என நிதியுதவி (Scholarship) வழங்கப்படுகிறது. 

மேலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் உதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த படிப்புக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், 11ஆம் வகுப்பு முடித்தவர்களும், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு படிப்புகளை படித்துக்கொண்டிருந்தாலும், இதை இணையாக தொடரும் வசதியும் உள்ளது.

இந்த பி.எஸ் திட்டம் முழுக்க ஆன்லைன், வேலை செய்யும் மாணவர்களுக்கும் ஏற்றது, பகுதி நேரமாக கற்றுக்கொள்ளும் வசதி என பல்வேறு நெகிழ்வான அம்சங்களை கொண்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் பி.எஸ் படிப்பு திட்டம் (IIT Madras bs program), நிதி தடைகள் உள்ள மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 75% வரை கட்டண சலுகை மற்றும் முழு உதவித்தொகை வாய்ப்புகள், அதிக மாணவர்கள் ஐஐடி தரக் கல்வியை அடைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share