ADVERTISEMENT

வீட்டிலேயே சாம்பார் மசாலா தயார் செய்வது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

How to prepare sambar masala at home

வீட்டிலேயே சாம்பார் மசாலா தயார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மக்கள் விரும்பி சாப்பிடுவது சாம்பாராகவே உள்ளது. இட்லி, தோடை, சோறு என பலவற்றுக்கும் சாம்பாயே மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் தற்போது பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் சாம்பார்  தூளையே வாங்கி சமைக்கிறார்கள். ஆனால், கடைகளில்  வாங்கப்படும் மசாலாக்களில் வீட்டில் தயாரிக்கப்படும் மசாலாக்களில் உள்ள தூய்மை, வாசம் இருப்பதில்லை.

ADVERTISEMENT

சாம்பார் மசாலா தயாரிக்க தேவையானவை

வீட்டில் சாம்பார் மசாலா தயாரிக்க சரியான மசாலா பொருட்களை தேர்வு செய்ய (sambar masala ingredients) வேண்டியது அவசியம். அவை சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மசாலா அரைத்த பிறகு சிறிதளவு ஈரப்பதம் இருந்தாலும் கூட விரைவில் கெட்டுப்போக செய்துவிடும். ஆகவே மசாலாவுக்காக எடுத்துவைக்கும் கொத்தமல்லி, சீரகம், வெந்தயம், கடுகு,  காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஈரப்பதம் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். கூடவே கருவேப்பிலையையும் எடுத்துக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

மசாலா தயாரிப்பது எப்படி?

ஒரு சுத்தமான வாணலியை அடுப்பில் குறைந்த தீயில் வைக்க வேண்டும். அதில் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள், 1.5 தேக்கரண்டி சீரகம், 5- 6 காய்ந்த சிவப்பு மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, சிறிதளவு வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்க்க வேண்டும். மசாலா பொருட்களில் (How to prepare masala) இருந்து லேசான வாசம் வரத் தொடங்கி, கருவேப்பிலை மொறுமொறுப்பாக மாறும் வரை குறைந்த தீயில் வதக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால், அடுப்பில் தீயின் அளவை அதிகரிக்க வேண்டாம். ஏனெனில் மசாலா பொருட்கள் மேலே கருகி உள்ளே பச்சையாகவே இருந்துவிட வாய்ப்புள்ளது. இதனால் மசாலாவின் சுவை (Sambar spice flavor) கசப்பாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வறுத்த மசாலா பொருட்களை ஆறவிடுங்கள்

மசாலா பொருட்களை நன்றாக வறுத்த பிறகு அவற்றை வாணலியிலேயே வைத்துவிட வேண்டாம். அதற்கு பதிலாக அதனை ஒரு தட்டில் கொட்டி (Let the spices cool) பரப்பிவிட்டு நன்றாக ஆறவிட வேண்டும். அதே சமயம் காலி வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகுத்தூள் சேர்த்து குறைந்த தீயில் வறுக்க வேண்டும். பருப்புகளை வறுப்பது என்பது சாம்பார் மசாலாவுக்கு நல்ல சுவையைக் கொடுக்கும். இதனையும் தனியாக தட்டில் எடுத்துவைத்து ஆற விட வேண்டும்.

மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும்

வறுத்த மசாலா பொருட்கள், பருப்புகள் முழுமையாக ஆறியதும் அதனை உலர்ந்துள்ள மிக்ஸி கிரைண்டரில் ஒன்றாக சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிதளவு (Grind powder in a mixi) பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். பெருங்காயம் சாம்பாருக்கு அற்புதமான நறுமணத்தை அளிப்பதோடு, செரிமானத்துக்கும் உதவுகிறது. மிக்ஸி மூடியை மூடி பொடியாக மாறும்வரை நன்றாக அரைக்க வேண்டும்.

இப்போது தூய்மையான, வாசம் வீசும் வீட்டு தயாரிப்பு சாம்பார் தூள் தயாராகிவிட்டது. இதனை கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை மாதக்கணக்கில் நாம் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share