ADVERTISEMENT

காதலாக இருந்தாலும்… கல்யாணமாக இருந்தாலும்: உறவை நல்லபடியாக வளர்க்க என்ன செய்யலாம்?

Published On:

| By Santhosh Raj Saravanan

How To Improve Relationship Love Marriage Tips Healthy Relationship Tamil

ஒரு relationship ஆரம்பிக்க்கும் போது அதில் எல்லாமே மிகவும் அழகாக இருக்கும். அக்கறை, அன்பு, நேரம் செலவிடுதல் — என எல்லாமே natural flow போலவே இருக்கும். காதலில் இருக்கும்போதோ அல்லது திருமண வாழ்விலோ ஆரம்ப நாட்களில் இருக்கும் அந்த ஈர்ப்பு, காலம் செல்லச் செல்ல மெல்லக் குறைவது போலத் தோன்றுகிறதா? “நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம், ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது” என்பது பல ஜோடிகளின் இன்றைய மனக்குமுறலாக இருக்கிறது.

உண்மையில், ஒரு செடியைத் தினமும் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பது போலத்தான் உறவுகளும். சின்னச் சின்னக் கவனமும், அக்கறையும் இருந்தால் எந்த உறவையும் காலமெல்லாம் பசுமையாக வைத்திருக்க முடியும். அது காதல் உறவாக இருந்தாலும், திருமண வாழ்க்கையாக இருந்தாலும் — அதை பராமரிக்க முயற்சிகள் தேவை. நல்ல உறவு தானாக நீடிக்காது… அதை நாம் தான் கட்டியெழுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

பேசுவது மட்டும் இல்ல… புரிந்துகொள்வது முக்கியம்

பல உறவுகளில் விரிசல் ஏற்பட முக்கியக் காரணம் ‘பேசாதது’ அல்ல, ‘தவறாகப் பேசுவது’ தான். உங்கள் துணையிடம் எதையாவது சொல்ல விரும்பினால், அதை ஒரு புகாராகத் தெரிவிக்காமல், உங்கள் உணர்வாகத் தெரிவியுங்கள். உதாரணமாக, “நீ எனக்கு நேரமே ஒதுக்குவதில்லை” என்று சொல்வதற்குப் பதில், “உன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்று சொல்லிப் பாருங்கள். அந்த உரையாடலின் போக்கே மாறிவிடும்.

ADVERTISEMENT

அதேசமயம் பல நேரங்களில் பிரச்சனை பேசாம இருப்பதால் அல்ல… சரியாக புரியாம இருப்பதால் தான்.

Partner பேசுறதை கேட்கும் போது reply சொல்லவேண்டி கேட்காதீங்க… புரிஞ்சுக்கணும் என்ற மனநிலையில் கேளுங்கள். அந்த ஒரு change relationship-ஐ soften பண்ணும். அடுத்தவர் சொல்ல வருவதை முழுமையாகக் கேட்பது பாதிப் பிரச்சனைகளைத் தீர்த்துவிடும்.

ADVERTISEMENT

சிறிய விஷயங்களை ignore பண்ண கற்றுக்கொள்ளுங்கள்

எல்லா விஷயமும் argue பண்ண வேண்டியதல்ல. சில விஷயங்களை விட்டுவிடலாம்.

ஒவ்வொரு சின்ன தவறும் பெரிய பிரச்சனையாக மாற ஆரம்பித்தால், அந்த உறவு சோர்வாகி விடும். Sometimes, peace is more important than being right.

Appreciation… உறவை உயிரோட்டமாக வைத்திருக்கும் – ஒரு ‘தேங்க்ஸ்’ சொல்லத் தயங்கலாமா?

“நான்தானே சம்பாதிக்கிறேன்” அல்லது “நான்தானே சமைக்கிறேன்” என்ற கடமை உணர்வுக்கு அப்பால், ஒருவருக்கொருவர் செய்யும் சிறு உதவிகளுக்கும் நன்றி சொல்லப் பழகுங்கள்.  “thank you”,  “இதை நல்லா பண்ணீங்க” “சூப்பரா இருக்கு” என்று சொல்லும்போது கிடைக்கும் அந்தப் புன்னகைக்கு ஈடு இணையே இல்லை.

Ego குறையும்போது தான் closeness அதிகரிக்கும் – ஜெயிக்க நினைக்காதீர்கள்!

சண்டையே வராத உறவு என்று ஒன்று இல்லவே இல்லை. ஆனால், அந்தச் சண்டையில் யார் ஜெயிப்பது என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது. சண்டையின் போது பழைய விஷயங்களைத் தோண்டி எடுக்காமல், தற்போதைய பிரச்சனையைப் பற்றி மட்டும் பேசுங்கள்.

“I am right” என்ற மனநிலை relationship-க்கு மிகவும் ஆபத்தானது. சற்று soft ஆக பேசினால், அந்த argument முடிந்து போயிருக்கும். Ego-வைக் காப்பாற்றுவதற்காக உறவை காயப்படுத்த வேண்டாம்.

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து இதை எப்படிச் சரி பண்ணலாம்?” என்று யோசியுங்கள். ஒரு விவாதத்தில் நீங்கள் ஜெயித்து, உங்கள் துணை தோற்றுப்போனால், உண்மையில் அங்கே உங்கள் உறவுதான் தோற்றுப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Quality time… quantity-யை விட முக்கியம்

ஒரு நாளில் எவ்வளவு நேரம் பேசுறீங்க என்பது முக்கியமல்ல… அந்த நேரம் meaningful-ஆ இருக்கணும் எனபதே முக்கியம். Phone இல்லாமல், distraction இல்லாமல் சில நிமிடங்கள் பேசினாலும், அது relationship-க்கு ஒரு பிணைப்பை கொடுக்கும்.

Boundaries வைத்திருப்பதும் அவசியம் – இரு பறவைகளுக்கும் தனித்தனி வானம் தேவை

இருவரும் உறவில இருந்தாலும், தனிப்பட்ட space இருவருக்கும் அவசியம். உறவில் இணைந்திருப்பது என்பது ஒருவரை ஒருவர் கட்டிப்போடுவது அல்ல. அப்படி space கொடுப்பது freedom மட்டும் இல்ல… அது respect. உங்கள் துணையின் தனிப்பட்ட ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் நண்பர்களுக்கு மதிப்பளியுங்கள். ஒருவரின் individuality-ஐ மதிக்கும் போது, அந்த உறவு இன்னும் healthy ஆகும்.

அதேபோல் உங்களுக்கென்றும் ஒரு தனி உலகத்தை வைத்துக்கொள்ளுங்கள். எப்போதுமே ஒட்டியே இருக்க வேண்டும் என்று நினைக்காமல், அவ்வப்போது கொடுக்கப்படும் அந்தச் ‘சிறு இடைவெளி’ உங்கள் அன்பை இன்னும் அதிகமாக்கும்.

மன்னிக்க தெரிந்தால்… உறவு நீடிக்கும்

Mistakes எல்லாரிடமும் நடக்கும். அதை பிடித்து வைத்து கொண்டே இருந்தால், அந்த உறவு heavy ஆகி விடும். Forgive பண்ணுவது, forget பண்ணுவதற்காக மட்டும் அல்ல, மனசை light-ஆ வைத்துக்கொள்ளவதற்காக என்று புரிந்துக்கொள்ளுங்கள். Perfect relationship என்று இங்கு எதுவும் கிடையாது.  சண்டை இல்லாத உறவு நல்லது இல்லை. சண்டைக்கு பிறகு அதை எப்படி handle பண்ணுறீங்க என்பதுதான் முக்கியம். ஒருவருக்கொருவர் grow ஆக உதவினால், அது தான் ஒரு strong relationship.

ஒரு உறவு… இருவரின் முயற்சி

ஒருத்தர் மட்டும் முயற்சி பண்ணினால் அது நீண்ட நாள் நீடிக்காது. Love-ஆக இருந்தாலும், marriage-ஆக இருந்தாலும் — respect, understanding, effort இந்த மூன்றும் இருந்தால் தான் அந்த உறவு meaningful ஆக இருக்கும். பல சமயங்களில் பெரிய changes எல்லாம் தேவையில்லை… சின்ன சின்ன understanding மட்டுமே போதும்.

உறவுகள் என்பது ஒரு அழகான ஓவியம் போன்றது. அதில் அவ்வப்போது சில கறைகள் படலாம், ஆனால் அதைத் துடைத்தெறிந்து மீண்டும் வர்ணம் தீட்டும் கலை தெரிந்தவர்களுக்கு, வாழ்க்கை ஒருபோதும் சலிப்பதில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share