பெங்களூரு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவை கைது செய்து அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த ரன்யா, அடிக்கடி சர்வதேச பயணங்கள் மேற்கொண்டதால், டி.ஆர்.ஐ கண்காணிப்பில் இருந்தார் என்பது அவருக்கே தெரியாதது.
அதாவது, கடைசி 15 நாட்களில் மட்டும் ஒரே மாதிரியான உடை அணிந்து நான்கு முறை அவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நான்காவது முறை அவர் துபாய்க்கு சென்று விட்டு மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு திரும்பிய போது அவர் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே கண்கொத்தி பாம்பாக இருந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் பெங்களூரு விமான நிலையம் வந்து காத்திருந்தனர். how ranya roa arrest?

விமான நிலையத்தில் ஹாயாக வந்து இறங்கிய ரன்யாவுக்கு இந்த முறை அதிர்ச்சி காத்திருந்தது.
கஸ்டம்ஸ் பகுதிக்கு வந்ததும் அவரை தனியாக அழைத்து சென்ற டி.ஆர்.ஐ அதிகாரிகள் பெண் அதிகாரிகளை கொண்டு அவரின் உடமைகள் மற்றும் உடலை சோதனையிட்டனர்.
அப்போது, ரன்யா தனது உடல் முழுவதும் தங்க நகைகளை சுருட்டி சுருட்டி வைத்திருந்தார். உடலில் பல பகுதிகளில் அவர் தங்க நகைகளும் அணிந்திருந்தார். இடுப்பு பகுதியில் நகைகளை சுருட்டி சுருட்டி சுற்றி வைத்திருந்தார். ஜாக்கெட்டுக்கு முன்னும் பின்னும் தங்கக்கட்டிகளாக இருந்தன. இப்படி, அவரிடத்தில் இருந்து 14.8 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.how ranya roa arrest?
ரன்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12 .56 கோடி என்கிறார்கள். தொடர்ந்து, ரன்யா பெங்களூருவில் உள்ள டி.ஆர்.ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.

கர்நாடகாவில் பணியாற்றும் டிஜிபி அந்தஸ்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளான ரன்யா, விமான நிலையத்திற்கு வந்ததும், தன்னை டி.ஜி.பி-யின் மகள் என்று கூறிக்கொள்வார்.
பின்னர், உள்ளூர் காவல்துறையினரை அழைத்து தன்னை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டுக் கொள்வார். இவரது வளர்ப்பு தந்தை ராமச்சந்திரன் ராவ் டி.ஜி.பி அந்தஸ்து கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கர்நாடக காவல்துறையில் ஹவுசிங் கார்ப்பரேஷனில் பணியாற்றி வருகிறார்.
ராமச்சந்திரன் ராவின் முதல் மனைவி மரணமடைந்து விட்டார். இதையடுத்து, மற்றொரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் திருமணம் மூலம் இரு குழந்தைகள் இருந்தனர். அதில், ஒருவர்தான் ரன்யா. இப்படித்தான் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வளர்ப்புமகள் ஆனார் ரன்யா. இப்போது, தங்கக்கடத்தலில் சிக்கி வளர்ப்பு தந்தையை சந்தி சிரிக்கவும் வைத்து விட்டார்.

ரன்யா கைதானதையடுத்து டிஆர்.ஐ அதிகாரிகள் அவரின் வீட்டையும் சோதனையிட முடிவு செய்தனர். லாவேல்லா சாலையிலுள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, 2.06 கோடி மதிப்புள்ள தங்கமும் 2.67 கோடி ரொக்க பணத்தையும் கைப்பற்றினர்.
அந்த வகையில், மொத்தம் 17. 29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்க பணம் ரன்யாவிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது, 33 வயதான இவர் சிக்மகளுர் பகுதியை சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக கிச்சா சுதீப்புடன் மாணிக்யா என்ற படத்தில் அறிமுகமானார்.இந்த படம் செம ஹிட் அடித்தது. இரு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படம் தெலுங்கில் மிர்ச்சி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.how ranya roa arrest?
தமிழிலில் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற படத்தில் நடித்தார். இது ஒன்றுதான் ரன்யா நடித்த தமிழ்ப்படம் ஆகும். இதற்கு பிறகு, தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து, மீண்டும் கன்னட திரையுலகுக்கே ரன்யா திரும்பினார். பதாகி என்ற கன்னட படத்தில் நடித்தார். அதற்கு பிறகு, கன்னட படங்களிலும் நடிக்கவில்லை. திரையுலகில் இருந்து டோட்டலாக விலகியிருந்தார். ஆனால், கமுக்கமாக இருந்து தங்கத்தை கடத்துவதில் தீவிரமாக இருந்துள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தற்போது, அவர் மீது 1962 ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, ரன்யா தனியாக தங்கக்கடத்தலில் ஈடுபட்டாரா? அல்லது அவருக்கு பின்னால் வேறு ஏதாவது கும்பல் உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ரன்யா தங்கக்கடத்தில் ஈடுபட்டது அவரின் ஐ.பி.எஸ் தந்தைக்கு தெரியாதா? கணவருக்கும் தெரியாதா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரன்யா கைது செய்யப்பட்ட கதையை பார்த்தால், சோனா சோனா … இவள் அங்கம் தங்கம்தானா? என்ற பாடல்தான் நினைவுக்கு வந்து செல்கிறது.
