கனமழை தொடருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வடதமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வந்த டிட்வா புயல் வலுவிழந்தது. தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 90 கி.மீ தொலைவில் டிட்வா புயல் வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.
இன்று பிற்பகல் ’டிட்வா’ புயல், மேலும் பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும்.
புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுச்சேரி- காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
