புரதம் நிறைந்த காலை உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. இதோ லிஸ்ட்…!

Published On:

| By Santhosh Raj Saravanan

Health Benefits of eating a protein rich breakfast

காலை உணவை புரதம் நிறைந்தவையாக சாப்பிடும்போது கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காலை உணவு என்பது அந்த நாளுக்கான அடித்தளமாக நமக்கு அமைகிறது. வழக்கமாக நாம் காலை உணவாக இட்லி, தோசை போன்ற மாவுச் சத்து நிறைந்த உணவுகளையே எடுத்துக்கொள்கிறோம். ஆனால், காலை உணவில் (healthy breakfast) புரத சத்துக்களை சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள் அல்லது கொஞ்சமாக மட்டுமே  சாப்பிடுபவர்கள் நாள் முழுவதும் சோர்வு, பலவீனம் மற்றும் அடிக்கடி பசி ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்.

ADVERTISEMENT
புரதச்சத்து உடலுக்கு ஏன் தேவை?

புரதச் சத்து நமது உடல்நலனுக்கு அடிப்படை தேவையாக உள்ளது. இது செல்கள் வளர்ச்சிக்கும், உடலின் சீரான செயல்பாட்டைப் பராமரிக்கவும் உதவிபுரிகிறது. காலையில் புரதத்தை (Protein Breakfast) உட்கொள்வது நீண்ட நேர ஆற்றலை அளித்து பசியைக் கட்டுப்படுத்துகிறது. சோர்வு மற்றும் மந்தநிலையைத் தடுக்கிறது. தொடர்ந்து புரதம் சாப்பிடுவதன் மூலம் தசைகளை வலுப்படுத்தி, தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி, கலோரியை குறைக்க (reduce calorie intake) உதவுவதால், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இது மிகவும் நன்மை அளிக்கிறது.

காலை உணவில் புரதம்.. எவையெல்லாம் சேர்க்கலாம்?

புரதச்சத்து நிறைந்த காலை உணவை தயார் செய்வது கஷ்டமான விஷயமல்ல. உண்மையில், அன்றாடப் பொருட்களைக் கொண்டே அதை எளிதாகத் தயாரிக்கலாம். பனீர் அல்லது தயிர் மற்றும் சிறிதளவு வேர்க்கடலையுடன் பழங்கள், பாலுடன் ஓட்ஸ் அல்லது கஞ்சி (oats or porridge with milk), மோருடன் முளைக்கட்டிய பயறு, கடலை மாவு சீலா அல்லது பாசிப்பருப்பு சீலா ஆகியவை புரதச் சத்து நிறைந்தவையாக உள்ளன.  இந்த உணவுகள் அனைத்தும் சுவையாக இருப்பதுடன், அத்தியாவசிய ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன. இவை வெறும் உதாரணத்திற்கு மட்டும்தான்.. மேலும் பல சுவையான புரதம் நிறைந்த உணவுகளையும் நாம் தயார் செய்து சாப்பிடலாம்.

ADVERTISEMENT
காலை உணவை தவிர்க்க வேண்டாம்

பலர் தங்களின் பரபரப்பான வேலை காரணமாக காலை உணவை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார்கள். இது ஆரோக்கியமற்றதாகும். காலை உணவை ஒருபோதும் தவிர்க்க (Never skip breakfast) வேண்டாம். காலை உணவை சாப்பிட உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தாலும், ஒரு குவளை பால், தயிர் அல்லது ஒரு கைப்பிடி வேர்க்கடலை போன்ற, எளிதில் செரிக்கும் மற்றும் புரதம் நிறைந்தவற்றை சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, நாள் முழுவதும் செயல்படும் திறனையும் அளிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share