ஐந்து நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இது விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாஜக என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அதில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் பெயரையும், திராவிட மாடல், பெண்ணுரிமை, தமிழ்நாடு அமைதி பூங்கா, சுயமரியாதை போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் தவிர்த்ததால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தன.
இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்துவிட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக Article356 என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி இருந்தது.

Article356 ஐ பின்பற்றி தான் மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கும் என்பதை வலியுறுத்தி அந்த ஹேஷ் டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் நேற்று (ஜனவரி 11 ) வெளியான விஜய் படம் வாரிசில் நடிகர் விஜய் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்ற ரீதியிலான வசனம் ஒன்றை பேசியிருப்பார்.

தற்போது இந்த வார்த்தையை பயன்படுத்தி ட்விட்டரில் 5 நிமிடத்தில்ஆட்சியே மாறும் என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினரும், விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு பாஜக சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சிறப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி நடிகர் விஜயை சந்தித்து பேசிய நிலையில், தற்போது நடிகர் விஜய் உடன் பாஜக கை கோர்க்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மறைந்தார் மூத்த பத்திரிகையாளர், கவிஞர் துரை (எ) வித்யா சங்கர்