மூத்த பத்திரிகையாளரும், புலனாய்வு செய்திகளுக்கு முன்னோடியுமான கவிஞர் துரைபாரதி என்கிற வித்யா சங்கர் நேற்று (ஜனவரி 11) இரவு மாரடைப்பால் காலமானார்.
நக்கீரன் இதழின் முதல் ஆசிரியராக பணியாற்றியவர் துரை. 1988 இல் இருந்து 91 வரை அந்த இதழின் ஆசிரியராக இருந்தார் துரை. வித்யா சங்கர் என்ற புனை பெயரில் கவிதைகளும் எழுதினார். கோவில்பட்டியை சேர்ந்த துரை அதன் பின் தனியாக பத்திரிகை தொடங்கினார், வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினார்.
தற்போது வின் தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடைசி நாள் வரை தனது பத்திரிகை நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த துரை நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
தனது பத்திரிகை பயணத்தில் பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் துரை என்கிற வித்யா சங்கர். மேலும் தன்னை பத்திரிகையாளர் என்பதோடு கவிஞர் என்ற அடையாளத்தை அதிகமாக விரும்பியவர்.
மறைந்த பத்திரிகையாளர், கவிஞர் துரை என்கிற வித்யாசங்கரின் மறைவுக்கு மின்னம்பலம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
துரையின் இறுதி நிகழ்வுகள் இன்று பகல் 2 மணியளவில் மண்டபம் ரோடு, வாட்டர் டேங்க் அருகில், கீழ்பாக்கம் கார்டன், சென்னை என்ற முகவரியில் நடக்கின்றது.
ஒரு நாள் கிரிக்கெட்: விராட், ரோகித் முன்னேற்றம்!
உறைய வைக்கும் குளிர்: ரயில்கள் தாமதம்!