புதுச்சேரி அளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 12) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முதலாவதாக உறியடி நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலை திருவிழாவான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் பானையில் வெல்லம், அரிசி போட்டு பொங்கல் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “பொங்கல் நம்முடைய தமிழர்களின் நிகழ்ச்சி. இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், சூரியன், ஆடு, மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம்.” என்றார்.
பொங்கல் விழா கொண்டாட்டத்தால் புதுச்சேரி ஆளுநர் மாளிகை விழாக்கோலம் பூண்டது.
செல்வம்
ஒரு நாள் கிரிக்கெட்: விராட், ரோகித் முன்னேற்றம்!
தேநீர் போட்டு மோடியை கலாய்த்த மஹுவா மொய்த்ரா