முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.
2022 ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விருது பெறுவோர் பட்டியல் இன்று (ஜனவரி 4) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாவல் பிரிவில் எழுத்தாளர் தேவி பாரதி, சிறுகதை பிரிவில் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ், கவிதை பிரிவில் எழுத்தாளர் தேவதேவன், மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் சி.மோகன், நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் பிரளயன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ஜனவரி 6ஆம் தேதி புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி விருது பெறத் தேர்வாகியுள்ள எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் பரிசுத் தொகையையும் வழங்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
மோனிஷா
ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம் : பிசிசிஐ