தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கடலூரில் நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாளைய கன்னியாகுமரி பிரச்சாரமும் ரத்து செய்யப்படும் என்ற செய்திகள் வெளியாகின.
ஆனால், நாளை திட்டமிட்டபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிற்பகல் 3 மணியளவில் கன்னியாகுமரியில் அவர் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
நாளை காலை விஜய் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்ல உள்ளார். நாளை மாலை 4 மணியளவில் கன்னியாகுமரி பகுதியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
