’ஹனுமான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Published On:

| By Selvam

Hanuman movie OTT Release Date

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஹனுமான். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா சூப்பர் ஹீரோ படமாக வெளியான ஹனுமான், உலக அளவில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் சூப்பர் வில்லனாக வினய் ராய் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் அம்ரிதா ஐயர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் Prasanth Varma Cinematic Universe- இன் (PVCU) முதல் படமாக வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் மார்ச் 2 ஆம் தேதி ஹனுமான் படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஹனுமான் படத்தை தொடர்ந்து PVCU-இன் அடுத்த படமாக பிரசாந்த் வர்மா இயக்கத்தில் “அதீரா” என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஹனுமான் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!

கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share