பட்ஜெட் கூட்டத்தொடர்! top ten news today in Tamil January 31 2024
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) துவங்குகிறது.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்!
அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விரைவாக மக்களை சென்றடைய, உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு!
சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா!
சென்னை ஆர்.கே.நகரில் இன்று நடைபெறும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
பொன்முடி வழக்கு!
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
எம்எல்ஏ மகன் ஜாமீன் மனு விசாரணை!
பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 620-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சவுதி அரேபியா, கம்போடியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் சவுதி அரேபியா, கம்போடியா அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி போட்டி!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!
கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா
top ten news today in Tamil January 31 2024