பாஸ்தா முதன்முதலில் கிமு 1700-இல் சீனாவில் உருவாக்கப்பட்டது என்று நம்பப்பட்டாலும் இன்று உலக நாடுகளில் உள்ள பலரின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த பாஸ்தாவில் உருளைக்கிழங்கு சேர்த்து ஸ்பைசி பாஸ்தா செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
என்ன தேவை?
உருளைக்கிழங்கு – 2
எல்போ பாஸ்தா – 200 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – ஒன்று
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நிறைய தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் பாஸ்தாவைச் சேர்த்து 5 -10 நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு வடிகட்டி சில நிமிடங்கள் உலரவிடவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்க்கவும். அதன் பிறகு நசுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தேவை யான உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் கடாயை மூடி வைக்கவும். கடைசியாக எல்போ பாஸ்தாவைச் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். சுவையான காரமான உருளைக்கிழங்கு பாஸ்தா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மட்டன் கீமா பாஸ்தா!
கிச்சன் கீர்த்தனா: சேமியா துவரம்பருப்பு பாத்