சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் முழுவதும் இன்று (ஜனவரி 31) முதல் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா என்பதை கண்காணிக்கவும், பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி மாதத்தில் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 31) முதல் இத்திட்டம் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வட்டாட்சியர்கள் முன்னிலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசின் நலத்திட்டங்கள், அரசு சேவைகள் ஆகியவை தொடர்பாக இந்த முகாமில் மக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
ஜமாபந்தி முகாம் போன்றே இந்த முகாமிலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மாவட்ட ஆட்சியர்கள், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.
இந்தத் திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்த கட்டம் எனலாம்; ’மக்களிடம் செல்’ என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம்.
உங்களை நாடி, உங்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா
சண்டிகர் சாம்பிள் : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அதிகாரிகள் ஆதிக்கம்… அமைச்சர்களின் இயலாமை… உதயநிதியை அதிரவைத்த ஒன்றிய செயலாளர்கள்