மீண்டும் அதிர்ச்சி தரும் தங்கம் விலை!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 8) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை 44 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இடையில் இரண்டு தினங்கள் விலை குறைந்தது. ஆனால் மீண்டும் தொடர்ச்சியாக விலை உயர தொடங்கி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேற்று (பிப்ரவரி 7) 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று (பிப்ரவரி 8) ரூ.80 உயர்ந்து ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 விலை உயர்ந்து ரூ.5,383-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 விலை உயர்ந்து 46,976-க்கும், ஒரு கிராம் ரூ.10 விலை உயர்ந்து ரூ.5,872-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல், ஒரு கிலோ ரூ.74,000-க்கும் ஒரு கிராம் ரூ.74-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சென்னையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: துயர நிலை மாறுமா?

1,813 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள்: ரூ.5,98,500 அபராதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share