gold and silver price

மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!

சென்னையில் இன்று (பிப்ரவரி 6) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தொடர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியளித்து வரும் தங்கம் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 5) 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையில் இருந்து இன்று (பிப்ரவரி 6) ரூ.240 உயர்ந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 விலை உயர்ந்து ரூ.5,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.264 விலை உயர்ந்து ரூ.46,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.33 விலை உயர்ந்து ரூ.5,853-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.200 விலை குறைந்து ரூ.74,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை குறைந்து ரூ.74-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

உலகக் கோப்பையை டிவியில் பார்த்து ஆசைப்பட்டேன்: ஜடேஜா

துருக்கி: 90 பேரின் உயிரை பறித்த நிலநடுக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts