விண்வெளியில் இருக்கும் சுபான்ஷு சுக்லாவுடன் பேசிய மோடி

Published On:

| By Kavi

விண்வெளியில் இருக்கும் சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடி பேசியுள்ளார். Modi speaks to Subhanshu Shukla

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் டிராகன் விண்கலம் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் ஜூன் 25ஆம் தேதி விண்வெளி புறப்பட்டனர். 

ADVERTISEMENT

இவர்கள் ஜூன் 26ஆம் தேதி மாலை விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அங்கு இரண்டு வாரம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.  மொத்தம்  60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும் இதில் 7 ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானது என்றும் தகவல்கள் வருகின்றன. 

40 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை   சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  விண்வெளி பயண அனுபவம் குறித்து  பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் வருகின்றன. 

முன்னதாக சக விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலத்திலிருந்து நேரடியாகப் பேசிய சுக்லா,  “விண்வெளியில் நுழைந்த பிறகு  உடல்நிலை நன்றாக இருப்பதாக உணரவில்லை. அதன் பிறகு  நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தை போல் கற்றுக்கொண்டிருக்கிறேன்”  என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Modi speaks to Subhanshu Shukla

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share