நடனப் பெண்களும், டிஜேவும் இன்றி மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டியை அமைதியாக நடத்துமாறு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளார். gavaskar request no dj no dance for remaining ipl
பாகிஸ்தானின் சமீபத்திய தாக்குதல்களில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், இந்திய பிரீமியர் லீக் 2025 இன் எஞ்சிய பகுதியை அமைதியான முறையில் நடத்துமாறு இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7, 8ஆம் தேதிகளில் ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது.
அதன் தொடர்ச்சியாக இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் இரு நாடுகள் இடையே போர் ஒப்பந்தம் காரணமாக வரும் 17ஆம் தேதி முதல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெறும் அப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பிசிசிஐக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “நான் உண்மையில் பார்க்க விரும்புவது என்னவென்றால். இவை கடைசி சில போட்டிகள், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுமார் 60 ஆட்டங்களை விளையாடப்பட்டுவிட்டது. இன்னும் 15, 16 ஆட்டங்கள் என்று மீதமிருக்கிறது என நினைக்கிறேன். பஹல்காம் தாக்குதலாலும், சில குடும்பங்கள் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்திருப்பதாலும், மீதமுள்ள போட்டிகளில் நடன பெண்கள் மற்றும் டிஜேக்களை அனுமதிக்க வேண்டாம் என கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர், ”தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அவசியம். மேட்ச் நடக்கட்டும், ரசிகர்கள் வந்து பார்க்கட்டும். நடனம் மற்றும் இசை இல்லாமல் போட்டியை பார்ப்பது, தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த குடும்பங்களின் உணர்வை மதிக்க ஒரு நல்ல வழியாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.