இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ரோகித் சர்மா, விராட் கோலி ரிட்டயர்டு ஆனத பத்தி சில பசங்க தீவிரமா பேசிட்டு இருந்தாங்க.
அவங்க கொஞ்சம் சத்தமா பேசினதால, அவங்களேயே எல்லோரும் அப்பப்ப திரும்பி பார்த்து பின்ன மறுபடியும் வழக்கம்போல டீக்குடிச்சிட்டு இருந்தாங்க.
ஆனா ஒருத்தரு மட்டும் ரொம்ப கோவமா அந்த பசங்கள பாத்துட்டு இருந்தாரு. ஒருகட்டத்துல, சட்டுனு போய் பேசிக்கிட்டு இருந்த பசங்கள்ல ஒரு பையன மட்டும் அந்தா அடி அடிச்சாரு.
அதுக்கப்பறும் சொல்றாரு… ’அவன் போயிட்டாம், இவன் போயிட்டானு பேசிட்டு இருக்க… பிளஸ் 2 பெயிலா போய்ட்டியே… அத பத்தி பேச மாட்டியா?’னு மறுபடியும் ஒரு அடிய போட்டு அந்த பையன வீட்டுக்கு இழுத்துட்டு போனாரு..
ஏன்னு தெரியல அந்த நேரம் பாத்து எங்க அப்பா மனசுல வந்துட்டு போனாரு… update kumaru memes and trolls may 14
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls may 14

சரவணன். 𝓜
டிரம்ப் ~ டேய், நாம போற இடத்தில் எல்லாம் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினதே நாம தான்னு சொல்வோம். அத கண்டுக்காம இருந்தா அவன் நமக்கு அடிமை
அப்படிலாம் இல்லன்னு விளக்கம் கொடுத்தா நம்ப அவனுக்கு அடிமை
~ அண்ணே ஏதும் பதிலே வரல.?
டிரம்ப் ~ அப்படின்னா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா.

குருநாதா
காலையில் தினம கண்விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
மொபைல்: பொய் சொல்றான் ரெஃப்ரி பொய் சொல்றான்…

Sasikumar J
டைம் மேனேஜ்மென்ட் என்பது
கைகடிகாரத்தில்
பத்து நிமிசம் ஃபாஸ்டா வைத்துக்கொள்வது

mohanram.ko
இபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இந்தியா – பாகிஸ்தான் போரையே தள்ளி வைத்துள்ளார்கள் – வைகை செல்வன்
மக்கள் : ஓஹோ…. எல்லாம் சரி இது டிரம்புக்கு தெரியாம பாத்துக்கோங்க.

kumar
வர வர குடிக்கவே கடுப்பா இருக்கு
குடிக்காம இருக்கவும் முடியல
விரைவில் திருமணம் செய்.. குடியை மறந்து குடித்தனத்தில் ஈடுபடு.
இப்ப இருக்குற பொண்டாட்டிய என்ன பண்ண?

கடைநிலை ஊழியன்
போர்க்களத்தில் ரோபோ வீரர்கள்.. வீரர்களின் உயிரிழப்பை தடுக்க புதிய முயற்சி!!! – செய்தி
போரே இல்லனாலும். உயிரிழப்பை தடுக்கலாம்.. அதுக்கு முயிற்சி பண்ணுவாங்கலா?

✒️Writer SJB✒️
மீ ~ உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும் தோழி ?
ஷீ ~ எனக்கு அனிமல்ஸ் னா ரொம்ப பிடிக்கும்,,
மீ ~ எங்க அம்மா என்ன எருமை மாடு எங்க அப்பா என்ன நாயேனு தான் கூப்பிடுவாங்க..!!!
லாக் ஆஃப்