ஆரோக்கியமாக உடல்நலனுக்கு காய்கறிகள், கீரைகள் முக்கியமாக தேவை. குறிப்பாக கீரை வகைகளுக்கு என தனி இடம் உண்டு. அதில் முருங்கைக் கீரை முக்கிய பங்கு வைக்கிறது. முருங்கைக் கீரையில் அத்தனை பயன்கள் உள்ளது. அதில் இல்லாத மருத்துவ குணங்களை இல்லை எனும் சொல்லும் அளவிற்கு உள்ளது. முருங்கையின் இலைகள் முதல் அதன் பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளன.
முருங்கைக் கீரையில் தயாரிக்கப்படும் சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், உடல் சூட்டைத் தணிக்கும், கை, கால் வலிகளைப் போக்கும் மற்றும் இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்த நீர் ஆதாரமாக சூப் உள்ளது. முருங்கைக் கீரை சூப்பை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது குடிப்பது பல நோய்களைத் தடுக்க உதவும். முருங்கை கீரை சூப் குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகளை பார்க்கலாம்.
எலும்புகள் வலிமை பெறும்
முருங்கை சூப்பில் வைட்டமின் கே, கால்சியம் அதிக அளவு உள்ளதால் எலும்புகள் வலிமையாகின்றன. எலும்புகளின் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் முக்கிய பங்காற்றுகிறது. கை கால்கள் முறிவின்போது முருங்கை சூப் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றன.
நீரிழிவு நோய்:
முருங்கை இலைச் சாறு ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் முருங்கை சூப் எடுத்துக் கொள்வதன் மூலம் உடம்பில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், உடலும் புத்துணர்ச்சியும் அளிக்கும்
செரிமானத்தை மேம்படுத்தும்
முருங்கை சூப்பில் அதிகளவு நார்ச் சத்துக்கள் உள்ளதால் இவை செரிமானத்தை சீராக்குகின்றன. முருங்கை சூப் எடுத்துக் கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பசியை நிர்வகிக்கிறது. இதனால் உடல் எடையும் சீராக இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் மலச்சிக்கலையும் போக்கும்.
ரத்த சோகை:
முருங்கை சூப்பில் தாதுக்கள் அதிகமாக உள்ளன. இரும்பு சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்தும். பெண்கள் மற்றும் குழந்தைகள் முருங்கை சூப்பை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் முருங்கைக் கீரை சூப்பை எடுத்துக் கொள்வது ரத்த சோகையை போக்குவதோடு உடல் வலிமை பெற உதவுகிறது. அறிவாற்றல் மற்றும் முளை செயல்பாட்டை மேம்படுத்தவும் இது உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி
முருங்கை சூப்பில் வைட்டமின் சி உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு பலத்தை தருகிறது. உடலில் தொற்றுகள் ஏற்படும் போது முருங்கை சூப் குடித்தால் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து முருங்கை சூப் எடுத்துக் கொள்ளுதல் சளி இருமலை போக்கும். அப்புறம் என்ன இனி முருங்கை சூப்பை வாரம் ஒருநாளாவது குடிக்க ஆரம்பிச்சுடுங்க மக்களே…
