ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படும் மை அழிந்துவிடுவதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுக்கு அதிமுக புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில் தமிழ்நாடே அதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் திமுகவினர் விதிமீறலில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டும் நிலையில், 222, 223 வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மை அழிந்துவிடுவதாகத் தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் அனுப்பியுள்ளது.

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படும் மை தரம் இல்லாமல் இருக்கிறது. எளிதாக அழிக்க முடியும் வகையில் இருக்கிறது.

ADVERTISEMENT

இதனால் போலி வாக்குகள் பதிவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரியா

ADVERTISEMENT

மேகாலயா நாகாலாந்தில் தேர்தல் : பிரதமர் வேண்டுகோள்!

கட்சி துண்டோடு வந்த தேமுதிக வேட்பாளர்: வாக்களிக்க அனுமதிக்கப்பட்டாரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share