மேகாலயா நாகாலாந்தில் தேர்தல் : பிரதமர் வேண்டுகோள்!

மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலா 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் இன்று (பிப்ரவரி 27) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

நாகாலாந்தில் ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தில் உள்ள அகுலுட்டோ தொகுதியில் பாஜகவை சேர்ந்த கஜிட்டோ கினிமா என்ற வேட்பாளர் போட்டியின்றி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் 59 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2,291 வாக்குச் சாவடிகளில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க உள்ளனர்.

60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் இன்று 59 தொகுதிகளுக்குத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் பாஜக – என்பிபி (தேசிய மக்கள் கட்சி) கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், இரு கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்தனியே போட்டியிடுகின்றது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியைப் பிடிக்க என்பிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றது.

359 வேட்பாளர்கள் போட்டியிடும் மேகாலயாவில் 3,419 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

19,000 ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநில காவல் அதிகாரிகளுடன் இணைந்து 119 மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

mehalaya nagaland assembly election

இரு மாநிலங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர். தேர்தல் மாலை 4 மணியுடன் நிறைவடைகிறது. பதிவான வாக்குகள் மார்ச் மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, மேகாலயா மற்றும் நாகாலாந்து தேர்தலில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மோனிஷா

கட்சி துண்டோடு வந்த தேமுதிக வேட்பாளர்: வாக்களிக்க அனுமதிக்கப்பட்டாரா?

5 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் மாற்றம்: மாவட்ட ஆட்சியர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts