ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23 ) மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கே மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த மோதலில் திமுக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திமுகவினர் கையில் இருந்த கொடிக் கம்பத்தை வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியினரின் மண்டையும் உடைந்தது. இவர்கள் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் ஈரோட்டில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அடங்கிய அமர்வில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் இடைத்தேர்தலில் கலவரம் நடப்பதாகவும், திமுகவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரியும் இன்று (பிப்ரவரி 23 ) முறையிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நாளை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
புதிய கேப்டனை அறிவித்த சன்ரைசர்ஸ்: காரணம் என்ன?
“புலவராக நினைத்தேன் ஆனால்…” ராமதாஸ்