ஸ்டாலினை பற்றி தவறாக பேசினேனா? நேற்று பேசியதை மறுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

eps campaign

கொரோனா காலத்தில் ஸ்டாலின் மக்களுக்கு சரியான ஆலோசனை கொடுக்கவில்லை. அப்போது எங்கு காணாமல் போனாய் என்றுதான் நான் பேசினேன். ஸ்டாலினை பற்றி தவறாக எப்போதும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொளத்தூரில் நடந்த கூட்டத்தில் திமுக ஆட்சியில் வறட்சி, வெள்ளம், புயல் வந்ததா? கொரோனா வந்ததா ?ஒன்றும் வரவில்லை கொரோனா வந்திருந்தால் அந்த முதலமைச்சர் காணாமல் போய் இருப்பார். இவரும் அந்த கொரோனாவிலேயே போய் இருப்பார் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விழுப்புரம் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 1976-இல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான். பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய தலைவர், என்னுடைய தந்தை கலைஞர். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான். இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன்?” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி “நேற்றைய தினம் கொளத்தூர் கூட்டத்தில் நான் பேசினேன் அப்போது கொரோனா காலம். கொரோனா காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கு சரியான ஆலோசனை கொடுக்கவில்லை. ஓடோடி போய் இன்று போட்டோ சூட் எடுக்கிறாரே? அப்போது எங்கு காணாமல் போனாய் என்று சொன்னேன்.

ADVERTISEMENT

உடனே புலம்புகிறார் என்னைப் பற்றி தவறாக பேசுகிறார் என்று.. காணாமல் போன என்று தான் சொன்னேனே தவிர.. உங்களைப் பற்றி தவறாக எப்போதும் பேசவில்லை.. பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஆனால் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் என்னவெல்லாம் பேசினீர்கள் என்று நேற்று தான் பேசியதை இன்று மறுத்துப்பேசி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share