எடப்பாடி தொகுதி: உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 எடப்பாடி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

எடப்பாடி தொகுதியில அதிமுக பொதுச்செயலாளரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி 6ஆவது முறையாக போட்டி போடுகிறார்.

இந்த தொகுதியில 1989, 91-ல் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். 2006 தவிர 2011, 16, 21-ல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை அடித்திருக்கிறார்.

மொத்தம் 5 முறை பழனிசாமி வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி. இங்கு பாமக 3 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 2006-ல் பாமக வேட்பாளர் காவேரியிடம் எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்தித்தார்.

அதிமுக கூட்டணியில் தான் இப்போது பாமக இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2026 தேர்தலில் திமுக வேட்பாளராக காசி இங்கே போட்டியிடுகிறார். ஜலகண்டபுரம் பேரூராட்சித் தலைவரான காசி, திமுகவில மாநில தொழிலாளர் அணி துணை செயலாளராகவும் இருக்கிறார்.

தவெக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அருண்குமார், வேட்புமனு பரிசீலனை அன்று மாயமானதால், அவரது கையொப்பம் இன்றி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்த தொகுதியில் நாதக சார்பில் பிரியதர்சினி களம் காண்கிறார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக- 35%
அதிமுக- 46%
தவெக- 14%
நாதக-4% வாக்குகள் பெறும்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் இந்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? சேலம் | Salem | Minnambalam Mega Survey Results 2026| Election 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share