சாதி பெயரை பகிரங்கமாக சொல்லி வாக்கு சேகரித்த திண்டுக்கல் சீனிவாசன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Former AIADMK Minister Dindigul Srinivasan admitted to hospital!

தமிழ்நாட்டை ஒரு கவுண்டர் ஆளப் போகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ளது. இதில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று திண்டுக்கல் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “நல்லாட்சி நடைபெறுவதற்கு எடப்பாடி வர வேண்டும். நீங்கள் எல்லோரும் ஒக்கலிக்க கவுண்டர்கள். ஆனால் அடுத்த முதலமைச்சராக வர இருப்பவர் கொங்கு வேளாள கவுண்டர். தமிழ்நாட்டை ஒரு கவுண்டர் ஆளப் போகிறார். இது மகிழ்ச்சியான செய்தி. நாம் அனைவரும் அவருக்கு உழைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஐயா பழனிசாமி கவுண்டர் முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியை நடத்திக் காட்டினார். ஸ்டாலினின் கொடுமையான ஆட்சியை மாற்றி நல்லாட்சி தருவதற்கு, இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share