டிஜிட்டல் திண்ணை: ’கறாரா’ சொன்ன ஸ்டாலின்.. கடும் குழப்பத்தில் ராகுல்.. காத்திருக்கும் விஜய்.. டென்ஷனில் டெல்லி!

Published On:

| By Mathi

DT DMK Congress Vijay

வைஃபை ஆன் செய்ததும், “ நான் அன்பு காட்டினேன்.. அவன் ஆட் கொள்ளவில்லை… ..” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

இந்த பாட்டு இப்ப எந்த கூட்டணிக்கு போட்டிருக்கிறீரு?

ADVERTISEMENT

பாட்டு அதுவா ஓடுதுய்யா.. திமுக- காங்கிரஸ் கூட்டணியில அடுத்தடுத்து நடக்குற அதிரடி ‘சம்பவங்கள்’தான் கோட்டை முதல் டெல்லி வரை ஒரே பேச்சு..

ஆமாய்யா.. கேசி வேணுகோபால் திடீர்னு சென்னைக்கு வந்திருந்தாரே..

ADVERTISEMENT

ம்ம்..சென்னைக்கு கேசி வேணுகோபால் வந்து சிஎம் ஸ்டாலினை சந்திச்சாரு.. அவரோட மூத்த காங்கிரஸ் தலைவர் தியோ சிங்கும் ஸ்டாலினை சந்திச்சாரு.. 45 நிமிஷம் இந்த சந்திப்பு நடந்துச்சு.. மறுநாள் கிரிஷ் சோடங்கர், கனிமொழியை சந்திச்சு பேசுனாரு..

இப்படி அடுத்த சந்திப்புகள்.. அடுத்து என்ன நடக்கும்னு எதிர்பார்ப்பு.. அப்படி என்னதான் நடக்குதுன்னு டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ சென்னையில இருந்து கேசி வேணுகோபால் ரிட்டர்ன் ஆனதுக்கு அப்புறமா ராகுல் காந்தி கடுமையான குழப்பத்துலதான் இருக்கிறாரு.. அடுத்து என்ன செய்யறதுன்னு தொடர்ந்து ஆலோசனை நடத்துகிட்டு இருக்கிறாரு..” என்றனர்.

ADVERTISEMENT

சரி.. அப்படி என்ன ராகுல் காந்திகிட்ட கேசி வேணுகோபால் சொன்னாருன்னு கேட்டப்ப, “ஸ்டாலினை கேசி வேணுகோபால் சந்திக்க போறதுக்கு முன்னாடியே டென்ஷனாகிடுச்சு.. ஐவர் குழு தலைவரான கிரிஷ் சோடங்கரை சந்திக்க விரும்பலைன்னு ஸ்டாலின் சொல்லிட்டாரு.. அவருதான் எல்லா குழப்பத்துக்குமே காரணம்.. அவரு இஷ்டத்துக்கு பேட்டி கொடுத்துட்டாரு.. அதனால அவரை வரவேண்டாம்னு சொல்லிட்டாரு ஸ்டாலின்..

அதனால கேசி வேணுகோபால், தியோ சிங் மட்டும் ஸ்டாலினை சந்திச்சு பேசினாங்க. இந்த சந்திப்புல பேசுன விஷயங்களை ராகுல் காந்திகிட்ட கேசி வேணுகோபால் ஒன்னுவிடாம சொன்னாரு..

அதாவது, கேசி வேணுகோபால்கிட்ட, “கூட்டணிக்குள்ள புதுசா கட்சிகள் வந்து இருக்காங்க.. அவங்களுக்கும் சீட் தரனும்.. அதனால கூட்டணியில இருக்கிற நாங்க உட்பட எல்லா கட்சிகளுமே சீட்டுகளை குறைச்சாகனும்.. நாங்களும் எங்க சீட்டுகளை குறைக்கிறோம்..

ஆனா நீங்க மட்டும்தான் அதிகமாக சீட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க.. நாங்க ஏற்கனவே போட்டியிட்ட நம்பர்ஸையே குறைக்கிறப்ப.. நீங்க அதைவிட கூடுதலா கேட்கிறீங்க..

தலைவர் கலைஞர் காலத்துல காங்கிரஸ் கட்சிக்குள்ள பிரணாப் முகர்ஜி போன்றவங்க சோனியாவுக்கு எதிரா நின்னாங்க.. அப்பவே சோனியா காந்திதான் பிஎம் கேண்டிடேட்டுன்னு தலைவர் கலைஞர் சொன்னாரு..

அதே மாதிரி நானும் ராகுல் காந்திதான் பிஎம் வேட்பாளருன்னு முதல்ல அறிவிச்சேன்.. இவ்வளவு தூரம் நாங்க ரொம்பவே பிரண்ட்லியா இருக்கிறோம்..

நான் ஒரு முதலமைச்சர்.. கட்சித் தலைவர்.. தமிழ்நாட்டு மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்கமாட்டாங்கன்னு வெளிப்படையா சொல்றேன்..

ஆனா உங்க கட்சியில இருக்கிறவங்க, ‘அதை மக்கள்தான் முடிவு செய்வாங்க’ன்னு சொல்றாரு.. அவரு என்ன எங்களுக்கு சவால் விடுறாரா?

அப்படி பேசுனவரை நீங்க கண்டிக்கவும் இல்லை.. ஆக்சன் எடுக்கவும் இல்லை.. அப்படின்னா நீங்க சொல்லிதான் அவர் இப்படி பேசுறாரா? எங்க ஆளுங்களையும் நான் பேச சொன்னா என்னா ஆகும்?

இந்த தேர்தல்ல கூட்டணியில இருக்கிற கட்சிகள் நம்பர்ஸை குறைச்சக்கனும்தான்.. இதுதான் எங்க ஸ்டேண்ட்..

இதை அக்செப்ட் பண்ணிட்டா கூட்டணியில இருக்கலாம்.. இல்லைன்னா நீங்க கூட்டணியை விட்டு போறதுன்னா போகலாம்.. இதை உங்க ஹை கமாண்ட்கிட்டேயும் சொல்லிடுங்க..”ன்னு கடுமையாகவே ஸ்டாலின் சொல்லி அனுப்பிட்டாரு..

இதைத்தான் ராகுல் காந்திகிட்ட ஒன்னுவிடாம அப்படியே கேசி வேணுகோபால் சொன்னாரு. அதனாலதான் ராகுல் காந்தி கடுமையான குழப்பத்துல அடுத்து என்ன செய்யலாம்னு சீரியசா டிஸ்கஷன் நடத்திகிட்டு இருக்காரு” என்கின்றனர்.

ம்ம்.. ஸ்டாலின் இவ்வளவு காட்டமா சொல்றதுக்கு காரணம் இருக்கனுமே?

இருக்காதா பின்ன? இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “சோனியா, கார்கே எல்லாமே திமுக கூட்டணியிலதான் இருக்கனும்னு ராகுலுக்கு பிரஷர் கொடுக்கிறாங்க..

ஆனா, காங்கிரஸை கூட்டணியில சேர்த்துடவே கூடாதுன்னு விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்குது.. காங்கிரஸை கூட்டணியில சேர்த்துட்டா கரூர் சம்பவம், ஜனநாயகன் படம்னு எல்லா பிரச்சனையும் ரொம்ப சீரியஸாகிடும்.. இதை எல்லாத்தையும் வெச்சுதான் காங்கிரஸை கூட்டணியில சேர்க்க கூடாதுன்னு விஜய்க்கு நெருக்கடி தருது பாஜக..

அதனால காங்கிரஸை கூட்டணியில விஜய் சேர்க்கமாட்டாருன்னு ஸ்டாலின் நம்புறாரு.. காங்கிரஸ் கட்சி நம்ம கூடதான் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறதால இப்படி ஒரு டப் ஸ்டேண்ட்டை ஸ்டாலின் எடுத்திருக்காரு” என்கின்றனர்.

ஓ… விஜய் சைடுல என்ன சொல்றாங்க?

விஜய்க்கு இப்படி எல்லாம் பாஜக நெருக்கடி கொடுக்குதா?ன்னு அவர் கூட இருக்கிறவங்ககிட்ட கேட்டோம்.. அப்ப, “ பாஜக சைடுல இருந்து நெருக்கடி இருக்கிறது எல்லாம் உண்மைதான்.. ஆனா விஜய் பயப்படலை.. எங்க கூட்டணியில காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் போறோம் அப்படிங்கிற வரைக்கும் லிஸ்ட் ரெடி பண்ணிட்டோம்.. அதை ராகுல் காந்திக்கும் அனுப்பி வெச்சிருக்கிறோம்” என்கின்றனர்.

அப்படியா.. கிரிஷ் சோடங்கர், கனிமொழியை சந்திச்சு பேசுனாரே.. என்னவாம்?

ஸ்டாலின் அப்பாயிண்ட்மெண்ட் தராததால கனிமொழியை சந்திச்சு பேச கிரிஷ் சோடங்கர் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருந்தாரு.. கனிமொழியும் ஸ்டாலின்கிட்ட இதை பத்தி சொன்னாங்க.. அப்ப, “சரி.. அவரை வரசொல்லி பேசுங்க”ன்னு ஸ்டாலின் சொன்னாரு..

இதுக்கு அப்புறமா சிஐடி காலனி வீட்டுல கனிமொழியை கிரிஷ் சோடங்கர் சந்திச்சாரு.. தொகுதிகள் நம்பர்ஸை பத்திதான் கிரிஷ் சோடங்கர் அதிகமா பேசுனாரு.. கனிமொழியோ, ”ஸ்டாலின் ஒரு முடிவு எடுத்திருக்காரு.. நம்பர்ஸை பத்தி நான் சொல்ல முடியாது.. ஒருவேளை டெல்லியில இருந்து ராகுல் காந்தி எல்லாம் பேசுனா நம்பர்ஸை அதிகப்படுத்த சான்ஸ் இருக்கு”ன்னு சொல்லி இருக்காங்க..

இப்போதைக்கு ஸ்டாலின் தரும் சீட்டுகளை வாங்கிட்டு திமுக கூட்டணியில காங்கிரஸ் நீடிக்குமா? அது வேண்டாம்னு அதிக சீட்டுக்காக விஜய் கூட கூட்டணி வைச்சுக்குமா? அப்படிங்கிறது எல்லாம் அறிவாலயத்துக்கு காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு வர்றப்ப தெரிஞ்சுடும் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share