ADVERTISEMENT

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ‘ ரோடு ஷோ’.. வேட்பு மனுத் தாக்கல்!

Published On:

| By Mathi

Udhayanidhi Stalin New

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஏப்ரல் 2-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2011, 2016 ஆகிய தேர்தல்களிலும் இத்தொகுதியில் திமுகவின் மறைந்த ஜெ. அன்பழகன் வெற்றி பெற்றிருந்ந்தார்.

ADVERTISEMENT

இத்தொகுதியில் 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் களம் காண்கிறார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக ஊர்வலமாக சென்ற உதயநிதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் சென்றனர்.

இதேபோல சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பாமகவின் திலகபாமா, பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share