இந்தியாவின் நகர்ப்புற ஏழைகளின் வீடுகளை இடிப்பது முறைசாராக் குடியிருப்புகளுக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யத் தவறுகிறது. Demolition of informal settlements in Delhi
கார்த்திக் சேஷன் Demolition of informal settlements in Delhi
கடந்த சில வாரங்களாக, டெல்லியில் முறைசாராக் குடியிருப்புகளில் இடிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முக்கிய வடிகால்களை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதற்கு ஒரு காரணம். இது பருவமழைத் தயார்நிலைக்கான அத்தியாவசிய நடவடிக்கை என்று அதிகாரிகள் கூறினாலும், இது நமது நகரங்களை வடிவமைக்கும் நகர்ப்புற அமைப்புகள் குறித்த அழுத்தமான கவலைகளை எழுப்புகிறது. Demolition of informal settlements in Delhi
ஜாங்புராவின் மதராஸி முகாமில் உள்ள 350க்கும் மேற்பட்ட வீடுகள் பராபுல்லா வடிகாலைப் புனரமைப்பதற்காக அகற்றப்பட்டன. இதில் 155 குடும்பங்களுக்கு இன்னும் மறுகுடியமர்வு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பட்லா ஹவுஸில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருப்போர் வெளியேற்றப்பட்டார்கள். குடியிருப்பாளர்கள் தங்களுக்குப் போதுமான அவகாசத்துடன் முன்னறிவிப்பு வரவில்லை என்றும், மறுவாழ்வுத் திட்டங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறினாலும், உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை உறுதிசெய்தது.
வெள்ளத்தைத் தாங்கக்கூடிய, பசுமையான நகரத்தை உருவக்குவதற்கான நடவடிக்கைகளாக இவை சித்தரிக்கப்பட்டாலும், இந்தச் செயல்கள் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன: யாருடைய நகரக் கனவு நிஜமாகிறது? ஆட்சியிலுள்ள எந்த இடைவெளிகள் முறைசாராக் குடியிருப்புகளின் பரவலுக்குக் காரணமாகின்றன?
அமைப்பு ரீதியான இடைவெளிகள் Demolition of informal settlements in Delhi

இந்தியாவின் நகர்ப்புறமயமாக்கல் விரைவானதும் சிக்கலானதுமாகும். இது நகரங்களின் வீட்டு வசதியையும் உள்கட்டமைப்புத் திறன்களையும் மீறியதாக அமைந்திருக்கிறது. நகர்ப்புற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 17 சதவீதம் பேர் முறைசாராக் குடியிருப்புகளிலேயே வசிக்கிறார்கள். நகரத்திலுள்ள வீட்டு வசதிப் பற்றாக்குறை, கிராமப்புற இடர்பாடுகள், மலிவு விலையில் முறையான வீட்டு வசதி இல்லாமை போன்ற ஆழமான கட்டமைப்பு சவால்களையே இது பிரதிபலிக்கிறது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகர்ப்புற ஏழைகளுக்கு 18 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் என்பவை முக்கியமான பிரச்சினைதான். ஆனால் அவற்றுக்கான தீர்வுகளில் நியாயம், முறையான நடைமுறை, சட்டப் பாதுகாப்பு ஆகியவை இருக்க வேண்டும். ‘ஓல்கா டெல்லீஸ் எதிர் பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷன் (1985)’ வழக்கிலும் ‘சுதாமா சிங் எதிர் ஜி.என்.சி.டி.டி (2010)’ வழக்கிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகள், கள ஆய்வுகள், பொதுமக்களுடனான ஆலோசனை, மறுவாழ்வுத் திட்டங்களை வலியுறுத்தும் அரசியலமைப்புப் பாதுகாப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றன.
இருப்பினும், இவற்றைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் சீரற்றதாகவே உள்ளன. நகர்ப்புற ஏழைகள் பெரும்பாலும் மாற்று வழிகள் இல்லாமல் வெளியேற்றப்படுகின்றனர். இது வருமான இழப்பு, சுகாதாரப் பாதுகாப்பற்ற நிலை, கல்வியில் தடங்கல் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. Demolition of informal settlements in Delhi
அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சிக்கு ஜனநாயக ரீதியிலான உள்ளாட்சி நிர்வாகம் அவசியம். 74ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வார்டு குழுக்கள் போன்ற மக்களும் பங்கேற்க வழிசெய்யும் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று கூறினாலும், பெரும்பாலான மாநிலங்களில் இவை பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ளன. தங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் முடிவுகளில் குரல் கொடுப்பதற்கான மக்களின் உரிமை இதனால் மறுக்கப்படுகிறது. Demolition of informal settlements in Delhi
திட்டமிடலிலும் வடிவமைப்பிலும் எந்தப் பங்கும் வகிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளால் முறைசாராத் தன்மையின் மூல காரணங்களை நிவர்த்திசெய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் பங்கேற்புத் திட்டமிடலுக்கான செயலில் ஈடுபடும் மன்றங்களாக உருவாக வேண்டும். நகர வளர்ச்சியில் சமத்துவம், குடிமக்களின் குரல் ஆகியவையும் உள்ளடக்கப்பட வேண்டும்.
அமைப்பு ரீதியான அணுகுமுறைகள் Demolition of informal settlements in Delhi

இந்தியாவின் நகரங்களுக்கு உடனடித் தீர்வுகள் போதாது. முறைசாராத் தன்மையின் அமைப்பு ரீதியான மூல காரணங்களை புல்டோசர்களை வைத்துச் சரிசெய்துவிட முடியாது. மக்களின் கோணத்திலிருந்து அவர்களுடைய பிரச்சினைகளைப் பார்க்கும் தன்மை, தொலைநோக்குப் பார்வை, அமைப்புரீதியான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகியவை இருந்தால்தான் நீடித்த மாற்றம் ஏற்படும். பிரச்சினையின் மூல காரணங்களை நிவர்த்திசெய்ய, திட்டமிடல், நிதி, நிர்வாகம், குடிமக்கள் பங்கேற்பு ஆகியவை இணைந்து செயல்படுவதற்கான கட்டமைப்பை ஜனாகிரஹா என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஒடிசாவின் ‘ஜக மிஷன்’ என்னும் முன்னெடுப்பு இந்த மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. 2017 முதல் இது முறைசாராக் குடியிருப்புகளை மாற்றுவதற்கு நில உரிமப் பாதுகாப்பு, சமூக ஈடுபாடு மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவற்றை இணைத்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்களை வழங்கியுள்ளது. இது உலகளாவிய பாராட்டையும் பெற்றுள்ளது. Demolition of informal settlements in Delhi
தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இதே தளத்தில் மேற்கொள்ளப்படும் சில முயற்சிகள், நெகிழ்வான, செயல்படும் சுற்றுப்புறங்களை உருவாக்குவதில் நில உரிமப் பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய திட்டமிடல் ஆகியவற்றின் ஆற்றலைக் காட்டுகின்றன. இந்தியா நகர்ப்புறமயமாகும்போது, நகர்ப்புற மாற்றத்தின் மையத்தில் நீதி, கண்ணியம் ஆகியவற்றைக் கொண்ட அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை

நமது நகரங்கள் வளர வளர, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகள் நமக்குத் தேவை. முதலாவதாக, குடியிருப்புகளை அகற்றி மக்களை வெளியேற்றச் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். முறையான கணக்கெடுப்புகள், உரிமை சரிபார்ப்பு, எளிதில் அணுகக்கூடிய வடிவங்களில் முன் அறிவிப்பு, சட்ட நிவாரணம், மறுகுடியமர்வுத் திட்டங்களைத் தெளிவாக விளக்குதல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். இவை வெறும் சட்ட ரீதியான தேவைகள் மட்டுமல்ல; பொதுமக்களின் நம்பிக்கைக்கு அத்தியாவசியமானவை. Demolition of informal settlements in Delhi
இரண்டாவதாக, மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் நில உரிமைப் பாதுகாப்பை இணைக்கும் நடைமுறையை அரசுகள் பரிசீலிக்க வேண்டும். ஒடிசாவின் ‘ஜக மிஷன்’ எதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் குடியிருப்புகளைக் கட்டுவதன் மூலம் இடப்பெயர்வைக் குறைக்கலாம். ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த, மக்களும் பங்கேற்கக்கூடிய வளர்ச்சியை மேம்படுத்தலாம். Demolition of informal settlements in Delhi
மூன்றாவதாக, வீட்டு வசதியில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இது ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினருக்கும் குறைந்த வருவாய் பிரிவினருக்குமான வீட்டு வசதிக்காக நிலங்களை ஒதுக்க வேண்டும். போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகிலுள்ள பொது நிலங்களைக் கூட்டுறவு அல்லது வாடகை வீட்டு வசதிக்காகப் பயன்படுத்த வேண்டும்.
மாதிரி வாடகைச் சட்டம் (Model Tenancy Act) வாடகைச் சந்தையைச் சீரமைப்பதற்கான சீரான கட்டமைப்பை வழங்குகிறது. தேவையான பாதுகாப்புகளுடன் இது சரியாகச் செயல்படுத்தப்பட்டால், முறைசாராக் குடியிருப்புகளின் பரவலைக் குறைக்க முடியும்.

நான்காவதாக, நகரங்களில்வார்டு அளவிலான பங்கேற்பு நிர்வாக நிறுவனங்களைப் புத்துயிர் பெறச்செய்ய வேண்டும். வார்டு குழுக்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவது, முறைசாராக் குடியிருப்புவாசிகள், மகளிர் குழுக்களின் பிரதிநிதித்துவத்துவத்தை உறுதிசெய்தல் ஆகியவை, நகர்ப்புறத் திட்டமிடலை மக்களுக்கு நெருக்கமாக ஆக்கும்.
ஐந்தாவதாக, நகர்ப்புறக் கொள்கை புலம்பெயர்ந்த தொழிலாளர் உரிமைகளைத் தன்னுடைய மையக் கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் நகர்ப்புறப் பொருளாதாரத்திற்கு உதவுவதுடன் நகரத்திற்குத் தேவையான சேவைகளையும் வழங்குகிறார்கள். வீட்டு வசதி, அடிப்படைச் சேவைகள், நடமாட்டம் ஆகியவை அவர்களுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டியது அவசியம். ரேஷன் அட்டைகள், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் போன்ற உரிமைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் வசதி அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
இந்தச் செயல்பாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளிலிருந்து, பிரச்சினைகள் உருவாகும் முன்பே மக்களை உள்ளடக்கும் அணுகுமுறைக்கு மாறுவதைக் குறிக்கின்றன. சட்டம், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு இலக்குகள் ஆகியவற்றையும் சீரமைக்கின்றன. முழுமையற்ற திட்டமிடல், பலவீனமான நிறுவனங்கள், தெளிவற்ற நிர்வாகம் ஆகியவற்றால் முறைசாராத்தன்மையும் விலக்கலும் நிகழ்கின்றன. நகர வடிவமைப்பிலும் முடிவெடுப்பதிலும் சமத்துவத்தைக் கொண்ட அணுகுமுறையைக் கோருகின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய நகரங்கள் நகர்ப்புற ஏழைகளின் சட்டபூர்வமான உரிமையை அங்கீகரிக்கின்றன. தற்காலிகத் தீர்வுகளுக்குப் பதிலாக மக்களின் பங்கேற்பு, நீடித்து நிற்கக்கூடிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டுவருகின்றன. இந்தியா தனது நகர்ப்புற எதிர்காலத்தை அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் மக்கள் நலன் என்னும் வாக்குறுதியின் அடிப்படையில் உருவாக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளைக் கவனித்துத் தீர்க்கக்கூடிய, ஒத்திசைவான நிறுவனங்களால் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தப்பட வேண்டும்.
கட்டுரையாளர்
கார்த்திக் சேஷன், ஜனாகிரஹா நிறுவனத்தின் கொள்கைப் பிரிவின் முதுநிலை மேலாளர்.
நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்