‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ளது. dmk stalin
திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், தமிழக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதா? தமிழக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் கருத்துகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளவும் தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு வஞ்சகம் செய்வதை விளக்கும் பிரசாரமாகவும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 17-ந் தேதி காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும், இந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
