தமிழக வெற்றிக் கழக கல்வி விருது விழா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். Controversial talk about Vijay Award ceremony
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆண்டுதோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை எடுக்கும் மாணவ மாணவிகளை சென்னை அழைத்து வந்து விருதுகள் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 3 கட்டங்களாக மாணவ மாணவிகளுக்கு விஜய் கல்வி விருதுகளை வழங்கினார்.
அப்போது விஜய்யுடன் மாணவ மாணவிகள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவருடன் கை குலுக்கி, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பாக பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “இரண்டு கிராம் தங்கத்திற்காக கூத்தாடியை கட்டிப்படுத்து முத்தம் கொடுக்க வைக்கிறார்கள். மாணவிகளின் தோள் மீது கை போட அனுமதிக்கிறார்கள். இதுதான் தமிழகத்தின் மரபா? இதற்கு பெற்றோர்கள் எப்படி சம்மதிக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இதற்கு சில மாணவிகள் விருது வழங்கும் விழாவிலேயே வேல்முருகனுக்கு பதில் தரும் வகையில் பேசி இருந்தனர். விஜய் எங்கள் அண்ணன் என்று கூறியிருந்தனர்.
அதேசமயம் வேல்முருகனுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம்தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளித்தது.
இந்த புகாரை ஏற்ற குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிக்கு நேற்று பரிந்துரை செய்தது.
இதைத்தொடர்ந்து வேல்முருகன் பேசியது தொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜுவாலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவால் வேல்முருகனுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. Controversial talk about Vijay Award ceremony
