ADVERTISEMENT

அதிமுக- பாஜக கூட்டணியில் நினைத்தே பார்க்காத பிரம்மாண்டமான கட்சி- பற்ற வைக்கும் இபிஎஸ்

Published On:

| By Mathi

AIADMK BJP EPS

அதிமுக- பாஜக கூட்டணியில் நினைத்துப் பார்க்க முடியாத, பிரம்மாண்டமான கட்சி ஒன்று இணைய இருப்பதாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். aiadmk Bjp

காட்டுமன்னார் கோவில் பகுதியில் சுற்றுப் பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே! இன்னும் பொறுங்க.. பிரம்மாண்டமான கட்சி, எங்க கூட்டணியில் வந்து சேர இருக்குது.. நினைச்சுபார்க்காத ஒரு கட்சி வரப் போகுது.. எதிர்பாருங்க.. 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெறும். அண்ணா திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும் என்றார்.

ADVERTISEMENT

அதிமுக பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாமக, விஜய்யின் தவெக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விசிகவுக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து வருகிறார். இந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு கட்சி கூட்டணியில் இணையப் போவதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share