நீலகிரி கார்டைட் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026: இன்ஜினியரிங், டிப்ளமோ மாணவர்களுக்கு அப்ரண்டிஸ் வாய்ப்பு

Published On:

| By Santhosh Raj Saravanan

cordite factory aruvankadu apprentice recruitment

பாதுகாப்புத் துறையில் பயிற்சி வாய்ப்பு

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் (Aruvankadu) செயல்படும் கார்டைட் தொழிற்சாலை (Cordite Factory), 2025 – 26 பயிற்சி ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (Munitions India Limited) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலை, இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு கால பயிற்சி வாய்ப்பை வழங்குகிறது.

காலியிடங்கள் விவரங்கள்

ADVERTISEMENT

அறிவிப்பின்படி, கிராஜுவேட் அப்ரண்டிஸ் (இன்ஜினியரிங்), டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (டிப்ளமோ) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த இடங்கள் மெக்கானிக்கல், கேமிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பல்வேறு இன்ஜினியரிங் துறைகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பயிற்சி காலம் மற்றும் உதவித்தொகை

இந்த அப்ரண்டிஸ் பயிற்சி:

1 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும்

உதவித்தொகை:

கிராஜுவேட் அப்ரண்டிஸ் பணிக்கு மாதம் ரூ.12,300, டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு மாதம் ரூ.10,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறையில் பி.இ / பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும், படிப்பு முடித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.

மேலும், அப்ரண்டிஷிப் விதிகளின்படி வயது வரம்பு அமல்படுத்தப்படும்.

தேர்வு முறை

இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு, இறுதி ஆண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு இல்லாமல், மெரிட் (merit) அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்பது முக்கிய அம்சமாகும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் ஆன்லைன் இல்லை, ஆஃப்லைன் முறையில் தபால் மூலம் அனுப்ப வேண்டும், விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 19, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்டைட் தொழிற்சாலை வெளியிட்டுள்ள இந்த அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு பாதுகாப்பு உற்பத்தி துறையில் அனுபவம் பெறும் முக்கிய வாய்ப்பாகும். குறுகிய கால பயிற்சியாக இருந்தாலும், தொழில்வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இது பயனுள்ளதாக அமையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share